/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ஆஞ்சநேயர் கோவிலில் அனுமந்த் ஜெயந்தி விழாஆஞ்சநேயர் கோவிலில் அனுமந்த் ஜெயந்தி விழா
ஆஞ்சநேயர் கோவிலில் அனுமந்த் ஜெயந்தி விழா
ஆஞ்சநேயர் கோவிலில் அனுமந்த் ஜெயந்தி விழா
ஆஞ்சநேயர் கோவிலில் அனுமந்த் ஜெயந்தி விழா
ADDED : ஜன 12, 2024 04:07 AM

கடலுார்: கடலுார் செம்மண்டலம் சாந்த ஆஞ்சநேயர் கோவிலில், அனுமந்த் ஜெயந்தி விழா நடந்தது.
விழாவையொட்டி, நேற்று காலை 7:00 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம், மகா தீபாராதனை மற்றும் மதியம் 1:00 மணி வரை முத்தங்கி அலங்கார தரிசனம் நடந்தது. தொடர்ந்து, மாலை 5:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை சிறப்பு அலங்கார தரிசனம் நடந்தது.
இதில், 26 அடி உயர ஆஞ்சநேயருக்கு 2008 வட மாலை, துளசி மாலை சாற்றப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.