/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/பொங்கல் பரிசு தொகுப்பு ;அமைச்சர் துவக்கி வைப்புபொங்கல் பரிசு தொகுப்பு ;அமைச்சர் துவக்கி வைப்பு
பொங்கல் பரிசு தொகுப்பு ;அமைச்சர் துவக்கி வைப்பு
பொங்கல் பரிசு தொகுப்பு ;அமைச்சர் துவக்கி வைப்பு
பொங்கல் பரிசு தொகுப்பு ;அமைச்சர் துவக்கி வைப்பு
ADDED : ஜன 12, 2024 06:32 AM

வத்தலக்குண்டு : திண்டுக்கல் மாவட்டத்தில் ரேஷன் கார்டு தாரர்களுக்கு ரூ. 1000 உடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணிகளை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியசாமி துவக்கி வைத்தார்.
வத்தலக்குண்டு பேரூராட்சியில் நடந்த இதன் விழாவில் கலெக்டர் பூங்கொடி, பழநி எம்.எல்.ஏ., செந்தில்குமார் முன்னிலை வகித்தனர். பேரூராட்சித் தலைவர் சிதம்பரம் வரவேற்றார். நிலக்கோட்டை தாசில்தார் தனுஷ்கோடி, கூட்டுறவு இணைப்பதிவாளர் காந்திநாதன், தி.மு.க., நகர செயலாளர் சின்னதுரை பங்கேற்றனர்.
வேடசந்துார் : வெள்ளனம்பட்டி,பூத்தாம்பட்டியில் எம்.எல்.ஏ., காந்திராஜன் தலைமை வகித்தார். ஒன்றிய தலைவர் சவுடீஸ்வரி, ஊராட்சித் தலைவர்கள் சத்தீஸ்வரி ,முருகன், கூட்டுறவு பதிவாளர் ராஜாங்கம், வழங்கல் அலுவலர் முத்துலட்சுமி முன்னிலை வகித்தனர். தி.மு.க., நிர்வாகிகள் கார்த்திகேயன், ரவிசங்கர், கவிதாமுருகன், நாகப்பன், மருதபிள்ளை பங்கேற்றனர்.
வடமதுரை : பாகாநத்தம், கொம்பேறிபட்டி, அய்யலுாரில் காந்திராஜன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். தி.மு.க., ஒன்றிய செயலாளர் சுப்பையன் முன்னிலை வகித்தார். கூட்டுறவு துணை பதிவாளர் அன்பரசன் வரவேற்றார். பேரூராட்சி தலைவர் கருப்பன், ஊராட்சி தலைவர்கள் ராஜரத்தினம், திரவியராஜ், பாண்டி, மஞ்சுளாதேவிகணேசன், தி.மு.க., இலக்கிய அணி அமைப்பாளர் இளங்கோ, நகர செயலாளர் கணேசன் பங்கேற்றனர்.
ஒட்டன்சத்திரம் : நகராட்சியில் தலைவர் திருமலைசாமி, துணைத்தலைவர் வெள்ளைச்சாமி தொடங்கி வைத்தனர். தாசில்தார் முத்துசாமி, கூட்டுறவு களஅலுவலர் மகேஸ்வரி, சார்பதிவாளர் கார்த்திகேயன், தலைமை செயற்குழு உறுப்பினர் கண்ணன் பங்கேற்றனர். ஒட்டன்சத்திரம் ஒன்றிய பகுதியில் ஒன்றிய தலைவர் அய்யம்மாள், துணைத் தலைவர் காயத்ரிதேவி, தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் ஜோதீஸ்வரன், தர்மராஜன், தொப்பம்பட்டி ஒன்றிய பகுதிகளில் ஒன்றிய தலைவர் சத்தியபுவனா, துணைத் தலைவர் தங்கம், ஒன்றிய செயலாளர் தங்கராஜ், சுப்பிரமணி பங்கேற்றனர்.
சாணார்பட்டி : கோபால்பட்டி, அஞ்சுகுழிப்பட்டியில் தி.மு.க., மாவட்ட பொருளாளரும் மாவட்ட கவுன்சிலருமான க.விஜயன் தொடங்கி வைத்தார். ஒன்றிய செயலாளர் தர்மராஜன், மாவட்ட துணைச் செயலாளர் சுந்தர்ராஜன், ஒன்றிய தலைவர் பழனியம்மாள் சுந்தரம், துணைத் தலைவர் ராமதாஸ், ஊராட்சி தலைவர்கள் தேவிராஜா சீனிவாசன், கந்தசாமி, ஒன்றிய கவுன்சிலர் முருகேசன் பங்கேற்றனர்