/உள்ளூர் செய்திகள்/சேலம்/மேல்நிலை தொட்டியில் ஏறி ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம்மேல்நிலை தொட்டியில் ஏறி ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம்
மேல்நிலை தொட்டியில் ஏறி ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம்
மேல்நிலை தொட்டியில் ஏறி ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம்
மேல்நிலை தொட்டியில் ஏறி ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம்
ADDED : ஜன 12, 2024 01:12 PM
மேட்டூர்: மேட்டூர், தொட்டில்பட்டி, காவிரி கரையோரம், சேலம் மாநகராட்சிக்கு குடிநீர் வினியோகம் செய்யும் தனி குடிநீர் திட்ட வளாகம் உள்ளது. அங்கு தினமும், 15.50 கோடி லிட்டர் குடிநீர் காவிரியில் உறிஞ்சு சுத்திகரித்து மாநகராட்சிக்கு வினியோகிக்கப்படுகிறது.
இந்த வளாகத்தில் குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள், 30 ஒப்பந்த ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இதில், 25 ஒப்பந்த ஊழியர்கள், 12 ஆண்டுகளாக பணிபுரிகின்றனர். அவர்கள் நேற்று மதியம், 1:00 மணிக்கு, 3 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை தொட்டி மீது ஏறி, வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:
தனியார் ஒப்பந்த நிறுவனம், எங்களுக்கு நவம்பர், டிசம்பர் சம்பளத்தை வழங்கவில்லை. கடந்த தீபாவளிக்குள் போனஸ் தருவதாக கூறி விட்டு இன்னமும் தரவில்லை. வருகை பதிவேடும் பராமரிப்பது இல்லை. எங்களுக்கு நிலுவை சம்பளம், போனஸ் வழங்கும் வரை தொட்டியில் இருந்து கீழே இறங்க மாட்டோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
தொடர்ந்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், கருமலைக்கூடல் போலீசார் பேச்சு நடத்தி சமாதானப்படுத்தினர்.