/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/5.51 லட்சம் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு5.51 லட்சம் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு
5.51 லட்சம் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு
5.51 லட்சம் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு
5.51 லட்சம் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு
ADDED : ஜன 12, 2024 12:14 AM
கோவை;கோவை மாவட்டத்தில், கடந்த இரு நாட்களில், ஐந்து லட்சத்து, 51 ஆயிரத்து, 724 ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில், 1,537 ரேஷன் கடைகள் உள்ளன. 11 லட்சத்து, நான்காயிரத்து, 942 ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். இவர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பாக, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு, ரூ.1,000 ரொக்கம் மற்றும் வேட்டி, சேலை வழங்கப்படுகிறது.
இத்திட்டம் நேற்று முன்தினம் துவக்கி வைக்கப்பட்டது. முதல் நாளன்று, இரண்டு லட்சத்து, 67 ஆயிரத்து, 864 கார்டுதாரர்களுக்கு வழங்கப்பட்டது.
இரண்டாம் நாளான நேற்று, இரண்டு லட்சத்து, 83 ஆயிரத்து, 860 கார்டுதாரர்களுக்கு வழங்கப்பட்டது.
இதுவரை, ஐந்து லட்சத்து, 51 ஆயிரத்து, 724 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இது, 49.93 சதவீதமாகும்.
இன்னும், ஐந்து லட்சத்து, 53 ஆயிரத்து, 218 கார்டுதாரர்களுக்கு வழங்க வேண்டும். யாருக்கும் விடுதல் இன்றி, வரும், 14ம் தேதி வரை பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க, ரேஷன் கடை ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டிருக்கிறது.
டோக்கன் இல்லாத அனைத்து அரிசி கார்டுதாரர்களும் இன்று முதல், 14ம் தேதி வரை, அந்தந்த ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசு தொகுப்பு பெற்றுக் கொள்ளலாம் என, கலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.