‛‛ரிஸ்க்'' எடுத்து ரீல்ஸ் போடுபவர்களுக்கு எச்சரிக்கை: 300 அடி பள்ளத்தில் விழுந்து இளம்பெண் உயிரிழப்பு

ADDED : ஜூன் 18, 2024 04:06 PM

மும்பை: மஹாராஷ்டிராவில் ரீல்ஸ் எடுப்பதற்காக காரை ரிவர்ஸ் எடுக்க முயன்ற 23 வயதான பெண், பிரேக்குக்கு பதிலாக ஆக்சிலரேட்டரை அழுத்தியதால், 300 அடி பள்ளத்தில் கார் விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தார்.
மஹாராஷ்டிரா மாநிலம் மாநிலம் சத்ரபதி சம்பாஜி நகரில், 23 வயதான சுவேதா என்ற பெண் தனது நண்பரிடம் ரீல்ஸ்க்காக கார் ஓட்டுவதை வீடியோ எடுக்குமாறு கூறியுள்ளார். அப்போது கார் ரிவர்ஸ் கியரில் இருந்துள்ளது. துவக்கத்தில் காரை மெதுவாக சுவேதா ஓட்டியுள்ளார்.
திடீரென பிரேக் அழுத்துவதற்கு பதிலாக ஆக்சிலரேட்டரை சுவேதா அழுத்தியதால், கார் மின்னல் வேகத்தில் பின்னோக்கி சீறிப்பாய்ந்து, தடுப்புகளை உடைத்து 300 அடி பள்ளத்தில் விழுந்தது. அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சுவேதா முதல் முறையாக காரை ஓட்டிப் பார்க்கும் போது விபத்து நிகழ்ந்துள்ளது.
சுவேதா, காருடன் 300 அடி பளத்தில் விழும் வீடியோ காட்சிகள் சமூகவலைதளத்தில் பரவி கண்கலங்க வைத்துள்ளது. நண்பர்களுடன் சுவேதா ரீல்ஸ் எடுத்த போது விபத்து நடந்துள்ளது. இது ரிஸ்க் எடுத்து ரீல்ஸ் எடுப்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது. .