/உள்ளூர் செய்திகள்/சென்னை/தொடக்க கல்வி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்தொடக்க கல்வி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
தொடக்க கல்வி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
தொடக்க கல்வி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
தொடக்க கல்வி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 12, 2024 12:47 AM
சென்னை,சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில், தொடக்க கல்வி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். அப்போது, 90 சதவீத தொடக்க கல்வி ஆசிரியர்களின் பதவி உயர்வை பறிக்கும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என, கோஷமிட்டனர்.
தொடக்க கல்வி ஆசிரியர்கள் கூறியதாவது:
தொடக்க கல்வி துறையில் பணியாற்றும் 90 சதவீத ஆசிரியர்களின் பதவி உயர்வு வாய்ப்பை பறிக்கக்கூடிய மாநில முன்னுரிமையை வலியுறுத்தும் அரசாணை 243ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 12 கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி உள்ளோம்.
எங்களது கோரிக்கை அமல்படுத்த அரசை வலியுறுத்தும் விதமாக, வரும் 27ல் மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதத்தில் ஈடுபட உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.