தொடக்க கல்வி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
தொடக்க கல்வி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
தொடக்க கல்வி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 12, 2024 12:15 PM
ஆத்துார்: தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஆத்துார் வட்டார கல்வி அலுவலகம் முன் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. குழு ஒருங்கிணைப்பாளர் செல்வம் தலைமை வகித்தார்.
அப்போது அரசாணை, 243ஐ ரத்து செய்தல்; போராட்டத்தின்போது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்தல்; இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக சம்பளம் வழங்குதல் என்பன உள்பட, 12 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதில் தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி, தமிழக ஆசிரியர் கூட்டணி, தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் கண்ணன், ராமகிருஷ்ணன், முருகன் உள்பட பலர் பங்கேற்றனர்.
அதேபோல் கெங்கவல்லி வட்டார கல்வி அலுவலகம் முன், தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி, மாவட்ட செயலர் வேல்முருகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி செயலர் முருகானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஓமலுார் வட்டார கல்வி அலுவலகம் முன், தொடக்க கல்வி இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில், வட்டார தலைவர் கணேசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் வட்டார செயலர் செல்வநாதன், மாவட்ட செயலர் மதியழகன், துணை செயலர் சரவணன் உள்பட பலர் பங்கேற்றனர். தாரமங்கலத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு வட்டார தலைவர் சிவக்குமார் தலைமை வகிக்க, துணைத்தலைவர்கள் முருகன், செந்தில்குமார், செயலர் சரவணன் உள்பட பலர் பங்கேற்றனர். பனமரத்துப்பட்டியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் வட்டார கூட்டு நடவடிக்கை குழு ஒருங்கிணைப்பாளர்கள் செந்தில்குமார், சிவசக்தி, அருண், சீனிவாசன் உள்பட பலர் பங்கேற்றனர்.