ADDED : ஜன 11, 2024 09:51 PM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி, 22வது வார்டுக்கு உட்பட்ட திருக்காலிமேடு, பாலாஜி நகரில், ஒரு மாதத்திற்கு மேலாக துாய்மை பணியாளர்கள் குப்பை சேகரிக்க வருவதில்லை என, புகார் எழுந்தது.
இதனால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது என, நம் நாளிதழில் நேற்று செய்தி வெளியானது.
இதை தொடர்ந்து, காஞ்சிபுரம் மாநகராட்சி சுகாதார அலுவலர் அருள்மொழி, நேற்று முன்தினம் திருக்காலிமேடு பாலாஜி நகரில் ஆய்வு செய்தார்.
சாலையோரம் அகற்றப்படாமல் குவியலாக கிடந்த குப்பையை உடனே அகற்றவும், அப்பகுதியில் வீடு வீடாக சென்று முறையாக குப்பை சேகரிக்கவும் துாய்மை பணியாளர்களுக்கு உத்தரவிட்டார்.
அதை தொடர்ந்து, சாலையோரம் இருந்த குப்பை அகற்றப்பட்டது. துாய்மை பணியாளர்கள்வீடு வீடாக சென்று குப்பையை சேகரித்தனர்.