சென்னை ஐ.சி.எப்., ஆலையில் 5 வந்தே பாரத் ரயில்கள் தயார்
சென்னை ஐ.சி.எப்., ஆலையில் 5 வந்தே பாரத் ரயில்கள் தயார்
சென்னை ஐ.சி.எப்., ஆலையில் 5 வந்தே பாரத் ரயில்கள் தயார்
ADDED : ஜூலை 23, 2024 03:38 AM

சென்னை: சென்னை ஐ.சி.எப்., ஆலையில் தயாராக உள்ள ஐந்து வந்தே பாரத் ரயில்கள், அடுத்த இரண்டு வாரங்களில் ரயில்வே வாரியத்துக்கு அனுப்பப்பட உள்ளதாக, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
சென்னை பெரம்பூரில் உள்ள ஐ.சி.எப்., எனப்படும் ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலையில், 500க்கும் மேற்பட்ட வடிவமைப்புகளில், 75,000க்கும் அதிகமான ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
கடந்த சில ஆண்டுகளாக இங்கு வந்தே பாரத் ரயில்கள் தயாராகின்றன. தற்போது ஐந்து புதிய வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இறுதி கட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இது குறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:
இதுவரை, 60க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் ரயில்வே வாரியத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்த நிதியாண்டில், 3,515 ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட உள்ளன. இவற்றில், எல்.எச்.பி., பெட்டிகள் 1,536, வந்தே பாரத் ரயில் பெட்டிகள் 658 இடம் பெற உள்ளன. தற்போது ஐந்து புதிய வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட்டு, இறுதி கட்ட ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறோம்.
அடுத்த இரண்டு வாரங்களில், இந்த ரயில்கள் வாரியத்துக்கு அனுப்பி வைக்கப்படும். எந்த வழித்தடங்களில் இயக்குவது குறித்து ரயில்வே வாரியம் அறிவிக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.