/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ குவியல் குவியலாக போதை ஊசி மருந்து பல்லடம் அருகே அதிர்ச்சி குவியல் குவியலாக போதை ஊசி மருந்து பல்லடம் அருகே அதிர்ச்சி
குவியல் குவியலாக போதை ஊசி மருந்து பல்லடம் அருகே அதிர்ச்சி
குவியல் குவியலாக போதை ஊசி மருந்து பல்லடம் அருகே அதிர்ச்சி
குவியல் குவியலாக போதை ஊசி மருந்து பல்லடம் அருகே அதிர்ச்சி
ADDED : ஜூலை 23, 2024 04:42 AM

பல்லடம், : திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே கரைப்புதுார் ஊராட்சி, சின்னக்கரை பகுதியில் உள்ள காட்டுப்பகுதி ஒன்றில், ஊசியுடன் கூடிய நுாற்றுக்கணக்கான சிரஞ்சுகள் மற்றும் போதைக்காக பயன்படுத்தப்படும் மாத்திரைகள் உள்ளிட்டவை குவியல் குவியலாக கிடக்கின்றன.
இந்திய மருத்துவர் சங்க தேசிய செயற்குழு உறுப்பினர் ராஜ்குமார் கூறுகையில், ''வலி நிவாரணியாக பயன்படுத்தப்படும் மருந்து, மாத்திரைகளை போதைக்கு பயன்படுத்துவது இளைஞர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. டாக்டர்களின் பரிந்துரைப்படி மட்டுமே இவற்றை வழங்க வேண்டும். ஆனால், ஆன்லைனில் தடையின்றி கிடைப்பதால்தான் இந்த அவல நிலை ஏற்பட்டு வருகிறது. இதனால், உயிருக்கே அபாயம் உள்ளது'' என்றார்.