/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ நீரோடை அருகில் குப்பை: பொதுச்சுகாதாரம் பாதிப்பு நீரோடை அருகில் குப்பை: பொதுச்சுகாதாரம் பாதிப்பு
நீரோடை அருகில் குப்பை: பொதுச்சுகாதாரம் பாதிப்பு
நீரோடை அருகில் குப்பை: பொதுச்சுகாதாரம் பாதிப்பு
நீரோடை அருகில் குப்பை: பொதுச்சுகாதாரம் பாதிப்பு
ADDED : ஜூலை 23, 2024 02:40 AM

கிணத்துக்கடவு, ஜூலை 23---
கிணத்துக்கடவு, கோவில்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட காளியண்ணன்புதூர் பூங்காநகரில், நூற்றுக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு உள்ள நீரோடை அருகில், அதிக அளவு குப்பை குவிக்கப்பட்டுள்ளதால், அப்பகுதியில் பொதுச்சுகாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இங்கு குப்பை கொட்ட வேண்டாம் என, கிராம சபை கூட்டம் மற்றும் ஊராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும், தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்பகுதியில் கருப்பராயன் கோவில் அருகில், குப்பை குவிந்து கிடப்பதால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
இதுமட்டும் இன்றி, வளர்ப்பு பன்றிகள் இங்குள்ள குப்பையை கிளறி நாசம் செய்கின்றன. தற்போது மழை பெய்வதால் அப்பகுதியில் மழைநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால் நோய் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே, மக்கள் நலன் கருதி நீரோடை அருகில் குவிக்கப்பட்டுள்ள குப்பையை அகற்றம் செய்து, குப்பை கொட்ட வேறு இடம் தேர்வு செய்ய வேண்டும்.
நீரோடையை பாதுகாக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.