/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ரோட்டில் பொங்கும் பாதாள சாக்கடை; பொதுச்சுகாதாரம் பாதிப்பு! ரோட்டில் பொங்கும் பாதாள சாக்கடை; பொதுச்சுகாதாரம் பாதிப்பு!
ரோட்டில் பொங்கும் பாதாள சாக்கடை; பொதுச்சுகாதாரம் பாதிப்பு!
ரோட்டில் பொங்கும் பாதாள சாக்கடை; பொதுச்சுகாதாரம் பாதிப்பு!
ரோட்டில் பொங்கும் பாதாள சாக்கடை; பொதுச்சுகாதாரம் பாதிப்பு!

நிரம்பி வழியும் சாக்கடை
பொள்ளாச்சி, பத்திரகாளியம்மன் கோவில், ரயில்வே கேட் அருகில் சாந்தி பள்ளி செல்லும் வழியில், பாதாள சாக்கடை நிரம்பி மழை நீருடன் கலந்து ரோட்டில் வழிந்தோடுகிறது. இதனால், அவ்வழியில் செல்லும் வாகன ஓட்டுநர்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. எனவே, விரைவாக சரி செய்ய வேண்டும்.
மரக்கிளையை வெட்டணும்!
கிணத்துக்கடவுக்கு உட்பட்ட கிராமப்புற ரோட்டின் பல பகுதிகளில், தென்னை ஓலை, மட்டை மற்றும் பிற மரக்கிளைகள் மழைக்கு சாய்ந்துள்ளது. அகற்றப்படாமல் அப்படியே உள்ளதால், வாகன ஓட்டுநர்கள் பெரும் சிரமத்துடன் பயணிக்கும் நிலை உள்ளது. எனவே, வாகன ஓட்டுநர்கள் நலன் கருதி, நெடுஞ்சாலைத்துறை இதை கவனித்து சுத்தம் செய்ய வேண்டும்.
வழுக்கலான நடைபாதை
வால்பாறை நகரில் பெய்யும் தொடர் மழையினால், பல இடங்களில் நடைபாதை வழுக்கல் நிறைந்து காணப்படுகிறது. இதனால், மக்கள் நடைபாதையில் நடக்க சிரமப்படுகின்றனர். எனவே, நகராட்சி நிர்வாகம் சார்பில், பிளீச்சிங் பவுடர் துாவி நடைபாதையை சுத்தம் செய்ய வேண்டும்.
எரியாத தெருவிளக்குகள்
உடுமலை, தென்னைமரத்து வீதியில் தெருவிளக்குகள் சரியாக எரிவதில்லை. இதனால் மாலை நேரங்களில் அப்பகுதி மக்கள் வெளியில் செல்வதற்கு அச்சப்படுகின்றனர். பொதுமக்களுக்கு இரவில் திருட்டு பயமும் அதிகரிக்கிறது. வாகன ஓட்டுநர்கள் சில நேரங்களில் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர்.
நோய் அபாயம்
உடுமலை முதற்கிளை நுாலகம் பின்புறம் உள்ள, காய்கறி கழிவுகள் அகற்றப்படாமல் உள்ளது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இக்கழிவுகளை அகற்ற நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கழிப்பிடத்தை சீரமைக்கணும்!
வால்பாறை அடுத்துள்ள சோலையாறு அணை பகுதியில் சுற்றுலா பயணியர் வசதிக்காக கட்டப்பட்ட கழிப்பிடம் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனால், சுற்றுலா பயணியர் அவதிக்குள்ளாகின்றனர். எனவே, நகராட்சி அதிகாரிகள் கழிப்பிடத்தை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தெருநாய்கள் தொல்லை
உடுமலை ஊராட்சி ஒன்றியம், கணக்கம்பாளையம் ஊராட்சி ராயல் லட்சுமி நகரில் தெருநாய்களின் தொந்தரவு அதிகமாக உள்ளது. அங்கு ரோட்டில் நடந்து செல்வோரை விரட்டி விரட்டி கடிக்கிறது. எனவே, நாய்களை கட்டுப்படுத்த ஊராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
துார்வார வேண்டும்
உடுமலை, பிரசன்ன விநாயகர் கோவிலில் சாக்கடை கால்வாய் துார்வாரப்படாமல் கழிவுகள் தேங்கி நிற்கிறது. அப்பகுதியில் மிகுதியான துர்நாற்றம் வீசுகிறது. கழிவுகள் தேங்குவதால் கழிவுநீர் செல்வதற்கும் வழியில்லாமல் குடியிருப்புகளில் கழிவுநீர் வெளியேறுகிறது.
அடையாளமிட வேண்டும்
உடுமலை, ஐஸ்வர்யா நகர் பகுதியில் வேகத்தடைகள் அடையாளமில்லாமல் உள்ளது. இதனால் வாகன ஓட்டுநர்கள் வேகத்தடை இருப்பதை அறியாமல் தடுமாறுகின்றனர். பள்ளி மாணவர்கள் அதிகம் பயன்படுத்தும் பகுதியாக இருப்பதால், வேகத்தடைகளுக்கு அடையாளமிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
போக்குவரத்து பாதிப்பு
உடுமலை, கல்பனா ரோட்டில் வாகனங்கள் ரோட்டை ஆக்கிரமித்து விதிகளை மீறி நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் அடிக்கடி அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. நான்கு சக்கர வாகனங்கள் ரோட்டின் பாதி வரை நிறுத்தப்படுவதால் மற்ற வாகன ஓட்டுநர்கள் செல்வதற்கு சிரமப்படுகின்றனர்.
குழியான ரோடு
பொள்ளாச்சி - கோமங்கலம் செல்லும் வழியில் பாலத்தின் அருகே உள்ள ரோடு, பல்லாங்குழி போன்று ஆங்காங்கே சேதம் அடைந்து இருப்பதால், வாகன ஓட்டுநர்கள் தடுமாறி விபத்து அபாயத்துடன் பயணம் செய்கின்றனர். எனவே, ரோட்டை விரைவில் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.