அண்ணா பல்கலையில் 'பயோ மெடிக்கல்' துறை துவக்கம்
அண்ணா பல்கலையில் 'பயோ மெடிக்கல்' துறை துவக்கம்
அண்ணா பல்கலையில் 'பயோ மெடிக்கல்' துறை துவக்கம்
ADDED : ஜூலை 23, 2024 05:41 AM

அண்ணா பல்கலையில், 'பயோ மெடிக்கல்' என்ற புதிய துறை துவக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலையில் இதுவரை மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், சிவில், தொழில்நுட்பம், தகவல் மற்றும் தொலை தொடர்பு, மேலாண்மை அறிவியல், மானுட அறிவியல் மற்றும் கட்டட அமைப்பியல் போன்ற துறைகள் உள்ளன.
இவற்றின் கீழ், பல்வேறு பாடப்பிரிவுகளில், இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளும், ஆராய்ச்சி படிப்புகளும் நடத்தப்படுகின்றன. இதில், பயோ மெடிக்கல் பாடப்பிரிவு, எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் துறையின் கீழ் செயல்பட்டு வந்தது. இந்நிலையில், மருத்துவ துறையில் தொடரும் பல்வேறு தேவைகள், வளர்ச்சித் திட்டங்கள், தொழில்நுட்ப முன்னேற்றம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, பயோ மெடிக்கல் தனித்துறையாக துவக்கப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா பல்கலையில் துணைவேந்தர் வேல்ராஜ் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், மத்திய அரசின் சுகாதாரத்துறை முதன்மை ஆலோசகர் டாக்டர் சவுமியா சுவாமிநாதன் பங்கேற்று, பயோ மெடிக்கல் துறையை நேற்று துவக்கி வைத்தார். இந்தத் துறையின் கீழ், பி.இ., பயோ மெடிக்கல், எம்.இ., பயோ மெடிக்கல் மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகள் நடத்தப்படும் என, துறையின் தலைவர் சசிகலா தெரிவித்தார்.