
திண்டிவனம்
ஒலக்கூர் அடுத்த சாரம் கிராமத்தில் அமைச்சர் மஸ்தான் பொங்கள் பரிசு தொகுப்பை வழங்கினார். ஒன்றிய சேர்மன் சொக்கலிங்கம், துணைச் சேர்மன் ராஜாராம், பி.டி.ஓ.,க்கள் நாராயணன், தேவதாஸ், தாசில்தார் சிவா, சாரம் ஊராட்சி தலைவர் வனஜா ராஜ்குமார், மாவட்ட கவுன்சிலர் ஏழிலரசி ஏழுமலை, ஒன்றிய கவுன்சிலர் ஜெகதீஸ்வரி பங்கேற்றனர்.
அவலுார்பேட்டை
வளத்தி அடுத்த கன்னலம் கிராமத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் சிறுபான்மை துறை துணை ஆட்சியர் முகுந்தன், ஒன்றிய சேர்மன் கண்மணி ஆகியோர் பரிசு தொகுப்பு வழங்கி திட்டத்தை துவக்கி வைத்தனர். தாசில்தார் முகமதுஅலி, வட்ட வழங்கல் அலுவலர் குணசேகரன், ஒன்றிய கவுன்சிலர்கள் நெடுஞ்செழியன், சியாமளா ஜெய்சங்கர், ஊராட்சி தலைவர் தமிழரசிபாண்டியன் உட்பட பலர் பங்கேற்றனர்.
விழுப்புரம்
விழுப்புரம் நகராட்சி 1வது வார்டு, விராட்டிக்குப்பம் பாதையில் உள்ள ரேஷன் கடையில் நடந்த நிகழ்ச்சிக்கு, கவுன்சிலர் கோல்டு சேகர் தலைமை தாங்கி, பொருட்களை வழங்கி துவக்கி வைத்தார்.