/உள்ளூர் செய்திகள்/சேலம்/'ஏற்காடு, கொல்லிமலையில் 27 மொபைல் கோபுரங்கள்''ஏற்காடு, கொல்லிமலையில் 27 மொபைல் கோபுரங்கள்'
'ஏற்காடு, கொல்லிமலையில் 27 மொபைல் கோபுரங்கள்'
'ஏற்காடு, கொல்லிமலையில் 27 மொபைல் கோபுரங்கள்'
'ஏற்காடு, கொல்லிமலையில் 27 மொபைல் கோபுரங்கள்'
ADDED : ஜன 12, 2024 12:16 PM
சேலம்: சேலம், செவ்வாய்ப்பேட்டையில், பி.எஸ்.என்.எல்., சேவை குறித்து அதிகாரிகள், ஊழியர்களின் விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது. பொது மேலாளர் சுபா தொடங்கி வைத்தார்.
கலெக்டர் அலுவலகம், திருவள்ளுவர் சிலை உள்ளிட்ட வீதிகள் வழியே சென்ற ஊர்வலம், பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள, பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் முடிந்தது. கோட்ட துணை பொது மேலாளர் சேகர், அதிகாரிகள், ஊழியர்கள் பங்கேற்றனர்.
இதையடுத்து பொது மேலாளர் சுபா நிருபர்களிடம் கூறியதாவது:
பி.எஸ்.என்.எல்., பொதுத்துறை நிறுவனத்தில் தற்போது புது திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், 1831 'பைபர்' இணைய சேவை இணைப்புகள் வழங்கி இந்திய அளவில் முதல் இடத்தில், சேலம் பி.எஸ்.என்.எல்., கோட்டம் தேர்வாகியுள்ளது. இதை கொண்டாடும்படி ஊர்வலம் நடந்தது. மேலும், யு.எஸ்.ஓ., திட்டம் மூலம் புதிதாக மாவட்டத்தில், '4ஜி' மொபைல் போன் கோபுரங்கள் - 50 அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதில் மலைக்கிராமங்களான கொல்லிமலையில், 15, ஏற்காட்டில், 12 மொபைல் போன் கோபுரங்கள் புதிதாக அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.