பார்லி பட்ஜெட் தொடர் வரும் 31ல் துவக்கம்
பார்லி பட்ஜெட் தொடர் வரும் 31ல் துவக்கம்
பார்லி பட்ஜெட் தொடர் வரும் 31ல் துவக்கம்
ADDED : ஜன 11, 2024 11:22 PM
பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர், வரும் 31ல் துவங்குகிறது. அன்று லோக்சபா மற்றும் ராஜ்யசபா கூட்டுக் கூட்டத்தில், ஜனாதிபதி திரவுபதி முர்மு உரை நிகழ்த்த உள்ளார்.
புதிய பார்லிமென்ட் கட்டடத்தில் முதன்முறையாக உள்ளே நுழையும் அவர், லோக்சபாவில் தன் உரையை நிகழ்த்துவார் என கூறப்படுகிறது.
லோக்சபா தேர்தல் நடக்கவுள்ளதால், 2024 - 25ம் நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜட்டை மட்டுமே நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய முடியும். அதன்படி, பிப்., 1ல், அவர் பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளார்.
தேர்தல் முடிந்து புதிய அரசு பதவியேற்கும் வரையில், அரசின் செலவினங்களுக்காக அரசு கருவூலத்திலிருந்து நிதி கோரி, பட்ஜெட் தாக்கல் தாக்கல் செய்து ஒப்புதல் பெறப்படும்.
வரும் ஜூன் 16ம் தேதியுடன், தற்போதைய, 17வது லோக்சபாவின் ஆயுட்காலம் முடிவுக்கு வரவுள்ளது.
அதனால், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இரண்டாவது ஆட்சி காலத்தின் கடைசி கூட்டத்தொடர் இது என்பதுடன், இந்த அரசின் கடைசி பட்ஜெட்டாக இருக்கும். இந்த இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரை, பிப்., 9 வரையில் நடத்த அரசு தரப்பு திட்டமிட்டுள்ளது.
- நமது டில்லி நிருபர் -