/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி: மாவட்ட கண்காணிப்பாளர் நேரில் ஆய்வுபொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி: மாவட்ட கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி: மாவட்ட கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி: மாவட்ட கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு
பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி: மாவட்ட கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு
ADDED : ஜன 12, 2024 04:17 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு நீள பன்னீர் கரும்பு மற்றும் 1000 ரூபாய் பணம் உள்ளிட்ட பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது.
மாவட்ட கண்காணிப்பு அலுவலர், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலர் பிரதீப் யாதவ், கலெக்டர் ஷ்ரவன்குமார் முன்னிலையில் வீரசோழபுரம், மாடூர், செம்பிமாதேவி, நகர் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள நியாய விலைக் கடைகளில் ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது, குடும்ப அட்டைதார்களுக்கு உரிய காலத்திற்குள் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கிட வேண்டும். முன்னரே டோக்கன் வழங்கி கூட்ட நெரிசலைத் தவிர்க்க வேண்டும். பொங்கல் தொகுப்புடன் இலவச வேட்டி சேலைகளை வழங்கிட வேண்டும். அதேபோல் முதியோர்கள், குடும்ப அட்டைதாரர்கள், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் பொங்கல் தொகுப்பு பொருட்கள் வழங்குவதை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, கலெக்டர் அலுவலகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகிக்கப்படுவது தொடர்பாக கூட்டுறவு துறை, உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அலுவலர்களுடன் கலந்தாய்வு நடத்தினார். மேலும் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் பெறப்பட்டுள்ள மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
கூட்டத்தில் எஸ்.பி., சமய்சிங் மீனா, டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) யோகஜோதி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் முருகேசன், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் ராஜலட்சுமி, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ெஷர்லி ஏஞ்சலா, பொது விநியோக திட்ட துணைப்பதிவாளர் சுரேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.