/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கோவில்களில் அனுமன் ஜெயந்தி கோலாகலம்கோவில்களில் அனுமன் ஜெயந்தி கோலாகலம்
கோவில்களில் அனுமன் ஜெயந்தி கோலாகலம்
கோவில்களில் அனுமன் ஜெயந்தி கோலாகலம்
கோவில்களில் அனுமன் ஜெயந்தி கோலாகலம்
ADDED : ஜன 12, 2024 12:17 AM

- நிருபர் குழு -
பொள்ளாச்சி, உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, பொள்ளாச்சி அருகே, பணிக்கம்பட்டி சுயம்பு ராமர் கோவிலில், ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, வெண்ணெய் காப்பு அலங்காரத்தில் அனுமன் அருள்பாலித்தார்.
பொள்ளாச்சி அருகே, பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவிலில், அனுமன் ஜெயந்தி சிறப்பு யாகம் நடந்தது. தொடர்ந்து, சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
திப்பம்பட்டி சிவசக்தி கோவிலில், ராம பக்த ஆஞ்சநேயருக்கு, 16 வகையான அபிேஷகம், ஆராதனைகள் நடைபெற்றன. ஜமீன் ஊத்துக்குளி கரிவரதராஜப்பெருமாள் கோவில், டி.கோட்டாம்பட்டி ஸ்ரீதேவி, பூதேவி வரதராஜப்பெருமாள் கோவில் மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
வால்பாறை
வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில் நேற்று காலை, 8:00 மணிக்கு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிேஷக அலங்கார பூஜை நடந்தது.
கருமலை பாலாஜி கோவிலில் ஆஞ்சநேயருக்கு நேற்று காலை, 7:00 மணிக்கு சிறப்பு அபிேஷக பூஜையும், அலங்கார பூஜையும் நடந்தது.
சோலையாறு முதல் பிரிவு மாரியம்மன் கோவில் வளாகத்தில் எழுந்தருளியுள்ள ராமர் கோவிலில், ஆஞ்சநேயருக்கு நேற்று காலை சிறப்பு அபிேஷக பூஜையும், அலங்கார பூஜைகள் நடந்தது.
அண்ணாநகர் ஸ்ரீராமர் கோவிலில், நேற்று காலை, 8:00 மணிக்கு ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிேஷக பூஜையும், அலங்காரபூஜையும் நடந்தது. பக்தர்கள் ஆஞ்சநேயரை தரிசித்தனர்.
உடுமலை
மார்கழி அமாவாசையில், அனுமன் பிறந்த நாள் ஜெயந்தி விழாவாக கொண்டாடப்படுகிறது. அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி, கோவில்களில், அனுமந்த சுவாமிக்கு, தயிர், பால், வெண்ணை, மஞ்சள், சந்தனம், பன்னீர் அபிேஷகம் நடந்தது.
காலை முதல் சங்கல்பம், சிறப்பு பூஜை, ேஹாமம் மற்றும் அலங்காரம் நடந்தது.
ஆஞ்சநேய சுவாமிக்கு தன்வந்திரி ேஹாமம், சுதர்சன ேஹாமம் உட்பட சிறப்பு வழிபாடுகளும் நடந்தது.
உடுமலை, வ.உ.சி., வீதி சீனிவாச ஆஞ்சநேய பெருமாள் கோவில், சித்தி புத்தி விநாயகர் கோவிலில் உள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர், உடுமலை திருப்பதி வேங்கடேச பெருமாள் கோவில், பிரசன்ன விநாயகர் கோவில், நவநீத கிருஷ்ண பெருமாள் கோவில்களில், சுவாமிகளுக்கு காலை முதல் பால், பன்னீர் உட்பட பல்வேறு திரவியங்களில் சிறப்பு அபிேஷகத்துடன் வெண்ணை காப்பு அலங்காரம் நடந்தது.
தில்லைநகர் சீரடி ஸ்ரீ ஆனந்த சாயி கோவிலில், ஆஞ்சநேயருக்கு வாடை மாலை சாத்தப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.
திரளான பத்கர்கள், பங்கேற்று, ராம நாமம் கூறியும், ஆஞ்சநேய மந்திரங்களை பாடியும் வழிபட்டனர்.