கட்டாய கல்வி உரிமை காக்க மேயர் பிரியா அறிவுறுத்தல்

UPDATED : ஜன 12, 2024 12:00 AM
ADDED : ஜன 12, 2024 11:04 AM
சென்னை:
சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில், கவுன்சிலர்களுக்கான பள்ளி மேலாண்மை குழு குறித்த பயிலரங்கம் நேற்று நடந்தது. அப்போது, மாமன்ற உறுப்பினர்களுக்கான பள்ளி மேலாண்மை குழுவிற்கான பயிற்சி கையேடு வெளியிடப்பட்டது.பின், மாநகராட்சி மேயர் பிரியா பேசியதாவது:
அனைத்து குழந்தைகளுக்குமான கல்வி பெறும் உரிமையை கல்வி உரிமை சட்டம் 2009 உறுதிப்படுத்துகிறது. குழந்தைகள் தரமான கல்வி பெறும் வகையில் உட்கட்டமைப்பை மேம்படுத்துதல், குழந்தைகளுக்கு உகந்த, பாதுகாப்பான பள்ளி சூழலை உருவாக்குதல், இடைநிற்றலை தடுத்தல் ஆகிய பணிகளை ஆசிரியர்கள், கவுன்சிலர்கள் கண்காணிப்பது அவசியம்.அதேபோல், வாய்ப்பு மறுக்கப்பட்ட நலிந்த பிரிவு குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வேண்டும். அந்த அடிப்படையில், ஒவ்வொரு பள்ளியிலும் 20 உறுப்பினர்களுடன் பள்ளி மேலாண்மை குழு அமைக்கப்பட்டு, அவர்கள் அளிக்கும் பரிந்தரைகளுக்கு உடனடி தீர்வு ஏற்படுத்தப்படுகிறது.இவ்வாறு அவர் பேசினார்.மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார், கமிஷனர் ராதாகிருஷ்ணன், துணை கமிஷனர் ஷரண்யா அறி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.