ADDED : ஜன 12, 2024 04:38 PM

உலகை இயக்கும் சூரிய பகவானை பற்றி தெரிந்து கொள்வோமா...
* இவர் மகர ராசியில் பிரவேசிக்கும் நாள்தான் தை முதல் நாள். இதையே மகர சங்கராந்தியாக கொண்டாடுகிறோம்.
* 'ஞாயிறு போற்றுதும்' என இவரை போற்றிப் புகழ்கிறது சிலப்பதிகாரம்.
* ஏழு குதிரைகளை கொண்ட ஒற்றைச் சக்கர ரதத்தில் வலம் வருபவர் சூரியன். இவரது சாரதி அருணன்.
* சூரிய வம்சத்தில் பிறந்தவரே கொடை வள்ளலான கர்ணன்.
* சூரியனைப் பழம் என்று கருதி வானில் பறந்து சென்றார் அனுமன். பின் இவரையே தன் குருவாக ஏற்று பாடங்களை கற்றார்.
* ஜோதிடத்தில் இவரை 'ஆத்மகாரகர்' என குறிப்பிடுகின்றனர்.
* இவர் முழு ஆற்றலோடு இருக்கும் மாதம் சித்திரை.
* உயிர்களுக்கு ஆற்றல் தருபவர் சூரியன். ஆனால் இவருக்கு ஆற்றல் தருபவள் காயத்ரிதேவி. இவளை வழிபட்டு சக்தியை பெறுகிறார்.
* சூரியவம்சத்தில் மகாவிஷ்ணு எடுத்த அவதாரம் ராமாவதாரம்.
* கார்த்திகை, உத்திரம், உத்திராடம் நட்சத்திரங்களுக்கு இவர் அதிபதி. இவருக்கு பிடித்த ராசிகள் மேஷம், சிம்மம். இந்த நட்சத்திரம், ராசியினருக்கு சூரியதசை நடக்கும் போது கெடுபலன் குறைவாக இருக்கும்.
* இவருக்குரிய கிழமை ஞாயிறு. இதற்கு 'எல்லா கிரகங்களையும் இறுகப் பற்றுபவர்' எனப்பொருள்.
* இவருக்கு பிடித்த தானியம் கோதுமை. எனவே கோதுமை தானம் அல்லது இதன் மூலம் செய்யப்பட்ட பண்டங்களை நைவேத்தியம் செய்யலாம்.