ADDED : ஜன 12, 2024 04:02 PM

கே.மணிவண்ணன், எழும்பூர், சென்னை.
*ஞாயிறன்று அசைவம் சாப்பிடலாமா...
சூரிய பகவானுக்கு உகந்த ஞாயிறன்று அசைவம் சாப்பிடாமல் அவரை வழிபட வேண்டும். ஆத்ம பலம், உடல் நலம், ஆளுமைத் திறன், தோற்றப்பொலிவு கிடைக்கும்.
பி,மைதிலி, ஜனக்புரி, டில்லி.
*சூரிய பகவானின் மகனாக கர்ணன் பிறந்தது ஏன்?
துார்வாசரிடம் உபதேசம் பெற்ற குந்தி, சூரிய மந்திரம் ஜபித்ததால் பிறந்தவன் கர்ணன். அவனே முற்பிறவியில் 'ஆயிர கவச' அரக்கனாக இருந்த போது சூரிய பகவானுக்கு மகனாக பிறக்கும் வரத்தை பெற்றிருந்தான்.
எஸ்.வினித், ஹலசூரு, பெங்களூரு.
*தை கார்த்திகையின் சிறப்பு என்ன?
கார்த்திகைப் பெண்கள் ஆறு பேரும் முருகப்பெருமானை வளர்க்கத் தொடங்கிய நாளே தைக்கார்த்திகை. அன்று விரதமிருந்தால் நினைத்தது நிறைவேறும்.
வி.ராஜன், தச்சநல்லுார், திருநெல்வேலி.
*சூரிய பகவானுக்கு பொங்கல் வைப்பது ஏன்?
உணவும், நீரும் தரும் இயற்கைக்கு நன்றி செலுத்தவே சூரிய பகவானுக்கு பொங்கல் வைக்கிறோம்.
டி.ராகவி, ராமநாதபுரம், கோயம்புத்துார்.
*உத்ராயணம், தட்சிணாயனம் என்றால் என்ன?
சூரிய பகவான் வடக்கு நோக்கிச் செல்லும் காலம் (தை - ஆனி) உத்ராயணம். தெற்கு நோக்கிச் செல்லும் காலம் (ஆடி - மார்கழி) தட்சிணாயனம்.
எம்.அனிதா, கன்னிவாடி, திண்டுக்கல்.
*சூரிய பகவானுக்கு கோயில் எங்குள்ளது?
கும்பகோணம்(தமிழகம்) அருகிலுள்ள சூரியனார் கோவில், கோனார்க்கில் (ஒடிசா) உள்ள சூரியக் கோயில்கள் விசேஷமானவை.
எல்.ரவி, திருத்தணி, திருவள்ளூர்.
*சூரிய பகவானின் குடும்பத்தினர் யார்?
மனைவிகள்: உஷா, பிரத்யுஷா. குழந்தைகள்: எமதர்மன், சனீஸ்வரன், யமுனை.
ஆர்.பிரபு, பசுமலை, மதுரை.
*சூரிய பகவானுக்குரிய மந்திரம் என்ன?
ஜபாகு சும சங்காசம்
காஸ்ய பேயம் மகாத்யுதிம்
தமோரிம் சர்வ பாபக்னம்
ப்ரண தோஸ்மி திவாகரம்
இதை சொன்னால் சூரிய பகவான் அருள் கிடைக்கும்.
வி.ரஜனி, நாகர்கோவில், கன்னியாகுமரி.
*ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?
முனிவர்களான வியாக்ரபாதர், பதஞ்சலியின் தவத்தை ஏற்று சிவபெருமான் நடன தரிசனத்தைக் காட்டினார். இந்நிகழ்வையே மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரத்தன்று 'ஆருத்ரா தரிசனம்' என சிவன் கோயில்களில் கொண்டாடப்படுகிறது.
ஆர்.கீதா, நெய்வேலி, கடலுார்.
*மகர சங்கராந்தி என்றால் என்ன?
சூரிய பகவான் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு செல்வதை 'சங்க்ரமணம்' என்பர். தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு சூரிய பகவான் செல்லும் நாளே மகர சங்கராந்தி. இந்நாளே தைப்பொங்கல்.