Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!

கேளுங்க சொல்கிறோம்!

ADDED : ஜன 05, 2024 10:42 AM


Google News
Latest Tamil News
ஆர்.ராஜேஷ், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி.

*பொய் பேசாமல் இருக்க என்ன செய்யலாம்?

பொய் பேசுவதால் கிடைக்கும் மகிழ்ச்சி தற்காலிகமானது. இதை உணர்ந்தால் போதும்.

வி.அருண், தாம்பரம், செங்கல்பட்டு.

*பசித்திரு விழித்திரு தனித்திரு - பொருள் என்ன?

வயிறு புடைக்க சாப்பிட்டால் அறிவு மங்கும். எனவே அளவாக சாப்பிட்டு பசியுடன் இரு.

* ஏழு மணிநேரத்திற்கு மேல் துாங்காமல் விழிப்புடன் செயல்படு.

* வீண் பேச்சை தவிர்த்து ஆன்மிகத்தில் ஈடுபடு.

எம்.சுவேதா, சுரண்டை, திருநெல்வேலி.

*அரைஞாண் கயிறாக பாம்பை விநாயகர் வைத்திருப்பது ஏன்?

விஷத்தை (தீமையை) புறக்கணித்து அமுதத்தை (நன்மையை) அளித்துக் காப்பவர் விநாயகர். இதை உணர்த்த பாம்பை ஆபரணமாக வைத்துள்ளார்.

கே.பாஸ்கரன், கரோல்பாக், டில்லி.

*மூன்று தலைமுறையினர் வாழ்ந்த வீட்டில் இருக்கலாமா?

பல தலைமுறையினர் வாழ்ந்த வீட்டில் இருப்பது நீங்கள் செய்த புண்ணியம்.

ஆர்.ராஜி, கன்னிவாடி, திண்டுக்கல்.

*அன்னதானம் அளித்த பின்பே சாப்பிட வேண்டும் என்பது ஏன்?

பசித்தவருக்கு அன்னம் அளித்தபின் சாப்பிடுவது மேலான தர்மம். இதை யாவர்க்குமாம் உண்ணும் போது ஒரு கைப்பிடி' என்கிறார் நாயன்மாரான திருமூலர்.

வி.பிரபு, ஹலசூரு, பெங்களூரு.

*கோடை காலத்தில் குலதெய்வத்திற்கு விழா நடத்துவது ஏன்?

கோடைகாலத்தில் விவசாயப்பணி குறைவாக இருக்கும். இதனால்தான் அச்சமயத்தில் குலதெய்வத்திற்கு விழா கொண்டாடுகிறோம்.

ஆர்.ராஜேஷ், உத்திரமேரூர், காஞ்சிபுரம்.

*மேற்கு நோக்கிய சிவனை வழிபட்டால்...

மேற்கு நோக்கிய சிவனை வழிபடுவது விசேஷம். விஷ ஜுரம், தீராத நோய், கடன்கள் மறையும்.

பி.கேதார்நாத், அவிநாசி, திருப்பூர்.

*தன்னைத் தானே பலியிடும் சிற்பம் தேர்முட்டியில் இருப்பது ஏன்?

தேரோட்ட விழாவில் விபத்து நேராமல் இருக்க இச்சிற்பத்தை செதுக்கி உள்ளனர்.

எம்.கமலம், கொட்டாம்பட்டி, மதுரை.

*கையில் ஆறு விரல் இருக்கலாமா?

இது இயல்பானதுதான். ஆறு விரல் இருப்பதை யோகம், அதிர்ஷ்டம் என்பர்.

கே.ராதா, கருங்கல், கன்னியாகுமரி.

*எங்கள் வீட்டில் நிறைய பல்லி ஊர்கிறதே...

காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோயிலில் உள்ள பல்லி சன்னதியில் பிரார்த்தனை செய்யுங்கள்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us