/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/இன்னும் ஒரு சுற்று தண்ணீர்; பி.ஏ.பி., விவசாயிகள் எதிர்பார்ப்புஇன்னும் ஒரு சுற்று தண்ணீர்; பி.ஏ.பி., விவசாயிகள் எதிர்பார்ப்பு
இன்னும் ஒரு சுற்று தண்ணீர்; பி.ஏ.பி., விவசாயிகள் எதிர்பார்ப்பு
இன்னும் ஒரு சுற்று தண்ணீர்; பி.ஏ.பி., விவசாயிகள் எதிர்பார்ப்பு
இன்னும் ஒரு சுற்று தண்ணீர்; பி.ஏ.பி., விவசாயிகள் எதிர்பார்ப்பு
ADDED : ஜன 11, 2024 11:09 PM
திருப்பூர்;'பி.ஏ.பி., அணையில் இருந்து இன்னும் ஒரு சுற்று தண்ணீர் கொடுக்க வேண்டும்' என, பி.ஏ.பி., விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பி.ஏ.பி., வெள்ளகோவில் கிளை கால்வாய் (காங்கயம் - வெள்ளகோவில்) நீர் பாதுகாப்பு சங்க தலைவர் வேலுசாமி கூறியதாவது:
கடந்த சில நாட்களாக பி.ஏ.பி., தொகுப்பு அணைகளின் நீர் பிடிப்பு பகுதிகளில், கணிசமான அளவு மழை பெய்திருப்பதாலும், அணைகளின் நீர் இருப்பும் தேவைக்கேற்ப உள்ள நிலையில், உரிய அரசாணைப் பெற்று நான்காம் மண்டலத்துக்கு, இன்னும் ஒரு சுற்று தண்ணீர் திறந்துவிட வேண்டும்.
ஆயக்கட்டின் பல இடங்கள் வறட்சியின் பிடியின் இருப்பதால், பி.ஏ.பி., நான்காவது மண்டல விவசாயிகள், பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர். வரும் நாட்களில் நீர் திருட்டை ஒழித்து, சட்டப்படி, உரிய முறையில் நீர் வினியோகம் செய்ய வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.