/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/42வது வார்டில் அடுக்கடுக்காக பிரச்னை; மக்களுடன் புகார் அளித்த கவுன்சிலர்42வது வார்டில் அடுக்கடுக்காக பிரச்னை; மக்களுடன் புகார் அளித்த கவுன்சிலர்
42வது வார்டில் அடுக்கடுக்காக பிரச்னை; மக்களுடன் புகார் அளித்த கவுன்சிலர்
42வது வார்டில் அடுக்கடுக்காக பிரச்னை; மக்களுடன் புகார் அளித்த கவுன்சிலர்
42வது வார்டில் அடுக்கடுக்காக பிரச்னை; மக்களுடன் புகார் அளித்த கவுன்சிலர்
ADDED : ஜன 12, 2024 12:23 AM
திருப்பூர்;மாநகராட்சி, 42வது வார்டு பகுதியில் நிலவும் பிரச்னைகளுக்கு தீர்வு காணக் கோரி, வார்டு மக்களுடன் அ.தி.மு.க., கவுன்சிலர் கோரிக்கை மனு அளித்தார்.
திருப்பூர் மாநகராட்சி, 42வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர், அன்பகம் திருப்பதி, வார்டு பகுதி மக்கள் சிலருடன் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் மற்றும் கமிஷனரிடம் நேற்று அளித்த மனுக்கள் விவரம்:
கோபால் நகர், 3வது வீதியில் உள்ள மேல்நிலை தொட்டி பழுதடைந்தும், போக்குவரத்துக்கு இடையூறாகவும் உள்ளது. அதனை அகற்றி வேறிடத்தில் புதிய தொட்டி கட்ட வேண்டும். செல்லம் நகர் பகுதியில் கழிவு நீர் செல்லும் வடிகால் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. பாதாள சாக்கடை திட்டத்தில் இணைக்க வேண்டும்.
சிவசக்தி நகரில் பாதாள சாக்கடை திட்டத்தில் கழிவு நீர் கொண்டு சேர்க்க லிப்டிங் ஸ்டேஷன் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், மின் இணைப்பு பெறாமல் அது பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. கே.வி.ஆர்., நகரில் உயர் மின் கோபுர விளக்கு அமைக்க வேண்டும்.
மங்கலம் ரோட்டில், ரோட்டோரங்களில் நிரந்தர ஆக்கிரமிப்புகள் ஏற்பட்டுள்ளன. அதை அகற்றி போக்கு வரத்துக்கு வசதி ஏற்படுத்த வேண்டும். அணைப்பாளையம் உயர்மட்டப் பாலம் நீண்ட காலமாக கிடப்பில் உள்ளது. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாளையக்காடு பகுதியில் குடிநீர் குழாய்கள் சேதமடைந்து 80 சதவீதம் குடிநீர் சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது. இப்பிரச்னைகளுக்கு விரைந்து தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.