/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/நீ எதனை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்... வலிமையே வாழ்வு போலீஸ் பாதுகாப்புடன் கோவிலில் வழிபாடுநீ எதனை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்... வலிமையே வாழ்வு போலீஸ் பாதுகாப்புடன் கோவிலில் வழிபாடு
நீ எதனை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்... வலிமையே வாழ்வு போலீஸ் பாதுகாப்புடன் கோவிலில் வழிபாடு
நீ எதனை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்... வலிமையே வாழ்வு போலீஸ் பாதுகாப்புடன் கோவிலில் வழிபாடு
நீ எதனை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்... வலிமையே வாழ்வு போலீஸ் பாதுகாப்புடன் கோவிலில் வழிபாடு
ADDED : ஜன 11, 2024 11:10 PM

அனுப்பர்பாளையம்;திருப்பூர் அருகே போலீஸ் பாதுகாப்புடன் மாரியம்மன் கோவிலில், பட்டியலின மக்கள் நேற்று வழிபாடு நடத்தினர்.
திருப்பூர் ஒன்றியம், பொங்குபாளையம் ஊராட்சிக்குட்பட்ட பொங்கு பாளையத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையதுறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலுக்குள் சென்று வழிபட பட்டியலின மக்களை அப்பகுதியினர் அனுமதிப்பதில்லை என்ற புகார் இருந்தது.
இதுகுறித்து, பொங்குபாளையம் ஏ.டி., காலனி பகுதியை சேர்ந்த கந்தசாமி, 43, என்பவர், ''தொடர்ந்து பல ஆண்டுகளாக எங்களை கோவிலுக்குள் சென்று வழிபட அனுமதிக்கவில்லை. எனவே, நாங்கள் கோவிலுக்குள் சென்று வழிபட வேண்டும். தடுப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என மாவட்ட நிர்வாகத்தில் மனு கொடுத்தார்.
ஆனால், மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டி திருப்பூர் மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சியினர், நேற்று கோவிலில் நுழைவுப் போராட்டம் நடத்த போவதாக அறிவித்தனர். இதனையொட்டி, திருப்பூர் வடக்கு தாசில்தார் மகேஸ்வரன், இரு தரப்பினரை அழைத்து அமைதி பேச்சுவார்த்தை நடத்தினார்.
அந்த பேச்சு வார்த்தையில், 'பட்டியலின மக்கள் கோவிலுக்குள் சென்று வழிபடலாம். அவர்களை யாரும் தடுக்கக்கூடாது,' என அறிவுறுத்தப்பட்டது. அதனையொட்டி, புகார் செய்த கந்தசாமி, உள்ளிட்ட மூன்று குடும்பத்தினர் நேற்று காலை கோவிலுக்குள் சென்று, பொங்கலிட்டு மாரியம்மனை சுவாமி தரிசனம் செய்தனர். இதனையொட்டி, அவிநாசி டி.எஸ்.பி., சிவகுமார் தலைமையில் போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.