ADDED : ஜன 12, 2024 04:07 PM

உடலுக்கு ஆரோக்கியத்தையும் ஆத்மாவிற்கு பலத்தையும் கொடுப்பவர் சூரியன். இதையே 'ஆரோக்யம் பாஸ்கராதிச்சேத்' என்கிறது ரிக்வேதம்.
நாம் உயிர் வாழ காற்று, நீர், உணவு போல சூரிய ஒளியும் அவசியம். எனவே அன்றாடக் கடமையில் ஒன்றாக சூரியநமஸ்காரம் செய்ய வேண்டும் என முன்னோர் ஏற்படுத்தினர். குளித்ததும் கிழக்கு நோக்கி நின்று சூரியனைப் பார்த்து கைகூப்பி வணங்குவதை சூரியநமஸ்காரம் என பலரும் நினைக்கின்றனர். ஆனால் இப்பயிற்சி யோக சாஸ்திரப்படி செய்ய வேண்டிய ஒன்றாகும். சூரியன் உதிக்கும் போது மட்டுமல்லாமல் மறையும்போதும் இதனைச் செய்யலாம்.
இப்பயிற்சியின் போது அதற்குரிய மந்திரத்தை சொல்வது நல்லது. இல்லையென்றால் காலையில் சூரிக்கதிர்கள் உடலில்படும்படி ஐந்து நிமிடமாவது நில்லுங்கள். இப்படி செய்துவந்தால் உங்கள் வாழ்க்கையும் சூரியனைப்போல ஜொலிக்கும்.