/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 12, 2024 12:18 AM

வால்பாறை;தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் நடந்த கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு, கூட்டு நடவடிக்கை குழு உயர்மட்டக்குழு உறுப்பினர் கென்னடி தலைமை வகித்தார்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி செயலாளர் ராஜபாண்டியன், தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக ஆசிரியர் கூட்டணி செயலாளர் வசந்தகுமார் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில், 'ஆன்லைன்' பணியிலிருந்து ஆசிரியர்களை முழுவதுமாக விடுவிக்க வேண்டும். அரசாணை, 243யை ரத்து செய்ய வேண்டும். இ.எம்.ஐ.எஸ்., பணியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். போராட்டத்தின் போது போடப்பட்ட எப்.ஜ.ஆர்.,யை ரத்து செய்ய வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தலைவர் இளங்கோ, தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட துணைத்தலைவர் அருள்பிரகாசம், பொருளாளர் முத்தையாசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.