/உள்ளூர் செய்திகள்/கடலூர்/சி.முட்லூர் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு யோகா பயிற்சிசி.முட்லூர் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு யோகா பயிற்சி
சி.முட்லூர் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு யோகா பயிற்சி
சி.முட்லூர் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு யோகா பயிற்சி
சி.முட்லூர் அரசு பள்ளியில் மாணவர்களுக்கு யோகா பயிற்சி
ADDED : ஜூலை 13, 2011 01:31 AM
கிள்ளை : சி.முட்லூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு யோகா
பயிற்சி முகாம் நடந்து வருகிறது.
சிதம்பரம் அருகே சி.முட்லூர் அரசு
மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 6,7 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு
மாணவர் நலத்திட்டம் யோகாசனக் கல்வி முகாம் சார்பில் மூச்சு பயிற்சி,
தியானம் மற்றும் ஆசனங்கள் குறித்து பயிற்சி வகுப்பு பள்ளி வளாகத்தில்
துவங்கியது.தலைமை ஆசிரியர் செங்குட்டுவன் வரவேற்றார். சிதம்பரம் மனவளக்கலை
உலக சமுதாய சேவா சங்க பயிற்றுனர்கள் மகாலிங்கம், தீபா உள்ளிட்ட குழுவினர்
மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளித்தனர்.