ADDED : ஜன 12, 2024 04:47 PM

அறிஞரிடம் ஒருவர் '' முன்னேறுவது எப்படி '' எனக்கேட்டார். அதற்கு நீங்கள்
கழுதையா? எருமையா? குதிரையா? அதை பொறுத்தது. எப்படி என்றால், ஒரு தட்டு தட்டினால் கழுதை எட்டி உதைக்கும். எருமை அப்படியே நிற்கும். குதிரை பாய்ந்து ஓடும். அதுபோல யாராவது ஒருவர் திட்டினால் சிலர் பதிலுக்கு திட்டுவார்கள். சிலர் கண்டுகொள்ளாமல் இருப்பர்.
ஆனால் சிலர் மட்டும் திட்டும் போது குதிரையைப் போல வேகமாக செயல்படுவர். பின்னால் எட்டி உதைப்பதும், கண்டுகொள்ளாமல் இருப்பதும் பயனற்றவை.
அப்படிபட்டவர்களின் வாழ்வில் தோல்வி தான் மிஞ்சும். முன்னோக்கி ஓடும் குதிரை
போல பிறர் திட்டும் போது அதை திருத்திக்கொள்ளும் வாய்ப்பாக கருதி செயல்படுபவன் முன்னேறுவான் என்றார் அறிஞர்.