/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/புதிய குடிநீர் உந்துநிலையம் சிவா எம்.எல்.ஏ., இயக்கி வைப்புபுதிய குடிநீர் உந்துநிலையம் சிவா எம்.எல்.ஏ., இயக்கி வைப்பு
புதிய குடிநீர் உந்துநிலையம் சிவா எம்.எல்.ஏ., இயக்கி வைப்பு
புதிய குடிநீர் உந்துநிலையம் சிவா எம்.எல்.ஏ., இயக்கி வைப்பு
புதிய குடிநீர் உந்துநிலையம் சிவா எம்.எல்.ஏ., இயக்கி வைப்பு
ADDED : ஜன 12, 2024 03:46 AM

வில்லியனுார்: வில்லியனுார் வெண்ணிசாமி நகரில் அமைந்துள்ள புதிய குடிநீர் உந்துநிலையத்தை சிவா எம்.எல்.ஏ., இயக்கிவைத்தார்.
வில்லியனுார் தொகுதி ஜி.என்.பாளையம், வெண்ணிசாமி நகர், எழில் நகர் மற்றும் வி.தட்டாஞ்சாவடி ஆகிய பகுதி பொதுமக்கள் பயன்பெரும் வகையில் பொதுப்பணித்துறை, பொது சுகாதாரக் கோட்டம் சார்பில் ரூ. 15 லட்சம் செலவில் வெண்ணிசாமி நகரில் புதிய ஆழ்துளை கிணறு, நீர் உந்து நிலையம் அமைத்துள்ளனர்.
புதிய குடிநீர் உந்துநிலையத்தை எதிர்க்கட்சித் தலைவர் சிவா நேற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழிலராஜன், ஊர் முக்கியஸ்தர்கள் ராமசாமி, ஏழுமலை, பத்மநாபன், முருகன், மோகன், நாராயணன்.
தெய்வநாயகம், கிருஷ்ணமூர்த்தி, மணி, செழியன், வீரக்கண்ணு, பழனி, தங்க கதிர்வேல் சந்தோஷ், பாஸ்டர் ரகு, மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் மணிகண்டன், ராமசாமி, சோமசுந்தரம், ரமணன், ராமதாஸ், கோபி, சரவணன், தேசிகன், கதிரவன், நடராஜன், திலகர், செல்வநாயகம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.