அரசு நிதி ஒதுக்குவது இல்லை ம.ஜ.த.,- எம்.எல்.ஏ., புலம்பல்
அரசு நிதி ஒதுக்குவது இல்லை ம.ஜ.த.,- எம்.எல்.ஏ., புலம்பல்
அரசு நிதி ஒதுக்குவது இல்லை ம.ஜ.த.,- எம்.எல்.ஏ., புலம்பல்
ADDED : ஜன 11, 2024 11:44 PM

மாண்டியா: ''அரசு நிதி ஒதுக்குவது இல்லை; நான் என்ன செய்வது,'' என்று, தொகுதி மக்களிடம், ம.ஜ.த., - எம்.எல்.ஏ., புலம்பி தள்ளியுள்ளார்.
மாண்டியா கே.ஆர்.பேட் ம.ஜ.த., - எம்.எல்.ஏ., மஞ்சு. இவர் தனது தொகுதிக்கு உட்பட்ட சிந்தகட்டா கிராமத்தில், மக்கள் குறைகேட்பு கூட்டம் நேற்று நடத்தினார். இந்த கூட்டத்தில் எழுந்து பேசிய மூதாட்டி ஒருவர், '' எங்கள் கிராமத்தில் எந்த வளர்ச்சி பணியும் நடக்கவில்லை.
சாலை, குடிநீர் உட்பட எந்த அடிப்படை வசதியும் செய்து கொடுக்கவில்லை. உங்களை நம்பி தானே வெற்றி பெற வைத்தோம். இப்படி செய்தால் எப்படி?,'' என்று ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
அந்த மூதாட்டிக்கு எம்.எல்.ஏ., மஞ்சு பதில் அளிக்கையில், ''நான் எம்.எல்.ஏ., ஆனதில் இருந்து, கே.ஆர்.பேட் தொகுதிக்கு, அரசு இதுவரை 50 லட்சம் ரூபாய் மட்டுமே நிதி ஒதுக்கி உள்ளது. எனது தொகுதியில் 382 கிராமங்கள் உள்ளன. இந்த பணத்தை வைத்து, என்ன வளர்ச்சி பணி செய்ய முடியும். வாக்குறுதி திட்டங்களால், வளர்ச்சி பணிகள் நடக்கவில்லை. அரசு ஊழியர்களுக்கே, சம்பளம் கொடுக்க முடியாத சூழ்நிலை உள்ளது. அரசு நிதி ஒதுக்கவில்லை என்றால், நான் என்ன செய்வது. அரசிடம் பேசி கூடுதல் நிதி கேட்கிறேன்,'' என்றார்.