/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/குறைந்தது செட்டிநாட்டிற்கு சுற்றுலா பயணிகள் வருகை; ஆர்வம் காட்டாத சுற்றுலாத்துறை அவலம்குறைந்தது செட்டிநாட்டிற்கு சுற்றுலா பயணிகள் வருகை; ஆர்வம் காட்டாத சுற்றுலாத்துறை அவலம்
குறைந்தது செட்டிநாட்டிற்கு சுற்றுலா பயணிகள் வருகை; ஆர்வம் காட்டாத சுற்றுலாத்துறை அவலம்
குறைந்தது செட்டிநாட்டிற்கு சுற்றுலா பயணிகள் வருகை; ஆர்வம் காட்டாத சுற்றுலாத்துறை அவலம்
குறைந்தது செட்டிநாட்டிற்கு சுற்றுலா பயணிகள் வருகை; ஆர்வம் காட்டாத சுற்றுலாத்துறை அவலம்
ADDED : ஜன 12, 2024 12:17 AM

காரைக்குடி : காரைக்குடியில் சுற்றுலாத்துறை போதிய அக்கறை காட்டாததாலும், அடிப்படை வசதி இல்லாததாலும் வெளிநாட்டு பயணிகள் உட்பட சுற்றுலா பயணிகளின் வரத்து குறைந்துள்ளது.
தமிழகத்தின் முக்கிய சுற்றுலா பகுதியாக காரைக்குடி செட்டிநாடு உள்ளது. தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாட்டு பயணிகள் என ஏராளமானோர் இங்கு வந்து செல்கின்றனர். நீண்ட அகலமான தெருக்கள், பெரிய அரண்மனைகள், பிரமிக்க வைக்கும் கலையம்சம் கொண்ட பங்களாக்கள், கோயில்கள், நீர் மேலாண்மையுடன் கூடிய தெருக்கள், தெப்பங்கள் என பார்ப்போரை வியக்க வைக்கும் பகுதியாக செட்டிநாட்டு பகுதி உள்ளது. தவிர, கானாடுகாத்தான் ஆத்தங்குடி பள்ளத்துார் உட்பட பல்வேறு பகுதிகளுக்கு சினிமாத் துறை சம்பந்தமான படப்பிடிப்பிற்காக ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கடந்த சில வருடங்களாக, சுற்றுலா பயணிகள் வருகை பெருமளவில் குறைந்துள்ளது. சுற்றுலா துறையை நம்பி உள்ள உணவகங்கள், விடுதிகள் இழப்பை சந்தித்து வருகின்றன. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் சுற்றுலா துறையின் போதிய ஒத்துழைப்பு இல்லாததே காரணமாக கூறப்படுகிறது
வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கூறுகையில்:
பிரமிக்க வைக்கும், பெரிய பங்களாக்களை காணும் போது வியப்பாக உள்ளது. அடித்தளம் போடப்படாமலேயே இக்கட்டடங்கள் கட்டப்பட்டிருப்பது வியப்புக்கு உரியது. சித்தன்னவாசல் பகுதியை பார்த்துவிட்டு செட்டிநாடு பகுதிக்கு வந்தோம். மிகுந்த ஆர்வத்துடன் இங்கு வந்த நிலையில், சுற்றுலாத்துறை சார்பில் எந்த வசதியும் இல்லை. தனியாருக்கு சொந்தமான வீடுகள் என்பதால் பல வீடுகள் பூட்டப்பட்டு கிடக்கிறது. தவிர அனுமதியும் வழங்கப்படுவதில்லை. நெடுந்துாரத்தில் இருந்து வந்தும், பார்க்க முடியாதது பலருக்கும் ஏமாற்றத்தை அளிக்கிறது. மேலும், சுற்றுலாத்துறை சார்பில் வழிகாட்டி இல்லை. தவிர, அமர்ந்து சாப்பிடுவதற்கு இடம் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதியும் இல்லை.
வியாபாரிகள் கூறுகையில்:
வெளிநாடு மற்றும் வெளி மாநில சுற்றுலா பயணிகளை நம்பி இங்கு பல உணவகங்கள் விடுதிகள் உள்ளன. கடந்த பல வருடங்களாகவே சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. சுற்றிப் பார்க்க வரும் வெளிநாட்டு பயணிகள் அவர்களே வழிகாட்டியை அழைத்து வரவேண்டும் அல்லது விடுதிகளில் உள்ள வழிகாட்டியை நம்பி இருக்க வேண்டி உள்ளது. சுற்றுலா துறையினரும் எந்த அக்கறையும் காட்டுவதில்லை. இதனால் சுற்றுலா பயணிகளை நம்பியுள்ள விடுதிகள் மற்றும் உணவகங்கள் இழப்பை சந்தித்து வருகிறது.