ADDED : ஜன 12, 2024 12:15 AM
திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுாரில் லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
திருவெண்ணெய்நல்லுார் கடைவீதி பகுதியில் சப் இன்ஸ்பெக்டர் பாலசிங்கம் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர்.
அப்போது அப்பகுதியில் லாட்டரி சீட்டு விற்ற அதே பகுதியைச் சேர்ந்த சுந்தரம், 70; என்பவரை கைது செய்தனர்.