/உள்ளூர் செய்திகள்/கடலூர்/விருத்தாசலத்தில் சமூக வளைகாப்பு நிகழ்ச்சிவிருத்தாசலத்தில் சமூக வளைகாப்பு நிகழ்ச்சி
விருத்தாசலத்தில் சமூக வளைகாப்பு நிகழ்ச்சி
விருத்தாசலத்தில் சமூக வளைகாப்பு நிகழ்ச்சி
விருத்தாசலத்தில் சமூக வளைகாப்பு நிகழ்ச்சி
ADDED : ஜன 12, 2024 04:02 AM

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் உள்ள தனியார் மண்டபத்தில், மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம் மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு, கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார்.
ஆர்.டி.ஓ., சையத் மெஹ்மூத் முன்னிலை வகித்தார். மாவட்ட திட்ட அலுவலர் பழனி வரவேற்றார்.
ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., நகராட்சி சேர்மன் சங்கவி முருகதாஸ், நகராட்சி துணை சேர்மன் ராணி தண்டபாணி, ஒன்றிய சேர்மன்கள் விருத்தாசலம் மலர், நல்லுார் செல்வி ஆடியபாதம் ஆகியோர் கலந்து கொண்டு, கர்ப்பிணி பெண்களை வாழ்த்தி பேசினர்.
அமைச்சர் கணேசன் 300 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைய காப்பு நடத்தி வைத்தார்.
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்கள் அல்லாடி நாகை யோஜனவள்ளி, பவானி, தாசில்தார் அந்தோணிராஜ், தி.மு.க., நகர செயலாளர் தண்டபாணி, ஒன்றிய செயலாளர் வேல்முருகன், காங்., கட்சி நகர தலைவர் ரஞ்சித்குமார் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணியாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் பங்கேற்றனர்.
முடிவில், விருத்தாசலம் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் முல்லை அழகி நன்றி கூறினர்.