போக்குவரத்து ஊழியர்களுக்கு சாதனை ஊக்கத்தொகை அறிவிப்பு
போக்குவரத்து ஊழியர்களுக்கு சாதனை ஊக்கத்தொகை அறிவிப்பு
போக்குவரத்து ஊழியர்களுக்கு சாதனை ஊக்கத்தொகை அறிவிப்பு
ADDED : ஜன 11, 2024 06:43 PM

சென்னை:போக்குவரத்து ஊழியர்களுக்கு சாதனை ஊக்கத்தொகை அறிவித்து அரசாணை வெளியிட்டு உள்ளது தமிழக அரசு
இது குறித்து வெளியிடப்பட்டு உள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது: போக்குவரத்து கழகத்தில் 2023-ம் ஆண்டிற்கான சாதனை ஊக்கத் தொகை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்படி 2023-ம் ஆண்டில் குறைந்தது 200 நாட்கள் மற்றும் அதற்கு மேல் பணியாற்றிய ஊழியர்களுக்கு ரூ.625-ம் , 151 நாட்கள் முதல் 200 நாட்களுக்குள் பணிபுரிந்து இருக்கும் ஊழியர்களுக்கு ரூ195-ம், 90 நாட்கள் மற்றுமற் 151 நாட்களுக்கு குறைவாக பணியாற்றியவர்களுக்கு ரூ.85 -ம் வழங்கப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.