ADDED : ஜன 12, 2024 01:01 AM
சென்னை,கொளத்துார் எம்.எல்.ஏ., அலுவலகத்தில், நேற்று பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
கொளத்துார் எம்.எல்.ஏ.,வும், முதல்வருமான ஸ்டாலின், அவரது மனைவி துர்காவுடன் விழாவில் பங்கேற்றார்.
விழாவில், கட்சி நிர்வாகிகள், அனிதா அச்சிவர்ஸ் அகாடமியில் பயிலும் மாணவ, மாணவியர் என மொத்தம் 1,000 பேருக்கு புத்தாடைகள் மற்றும் பொங்கல் பரிசுகளை முதல்வர் வழங்கினார்.
அதே போல கொளத்துார் பல்லவன் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் நடந்த பொங்கல் விழாவில், கட்சி நிர்வாகிகள் 2,200 பேருக்கு பொங்கல் பரிசுகளை வழங்கிய முதல்வர், பொங்கல் வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
விழாவில், ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் ‛தாயகம்' கவி, வெற்றி அழகன், மேயர் பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.