/உள்ளூர் செய்திகள்/தேனி/போடி மீனாட்சியம்மன் கண்மாய் ரோடு சீரமைக்கும் பணி துவக்கம்; தினமலர் செய்தி எதிரொலிபோடி மீனாட்சியம்மன் கண்மாய் ரோடு சீரமைக்கும் பணி துவக்கம்; தினமலர் செய்தி எதிரொலி
போடி மீனாட்சியம்மன் கண்மாய் ரோடு சீரமைக்கும் பணி துவக்கம்; தினமலர் செய்தி எதிரொலி
போடி மீனாட்சியம்மன் கண்மாய் ரோடு சீரமைக்கும் பணி துவக்கம்; தினமலர் செய்தி எதிரொலி
போடி மீனாட்சியம்மன் கண்மாய் ரோடு சீரமைக்கும் பணி துவக்கம்; தினமலர் செய்தி எதிரொலி
ADDED : ஜன 12, 2024 06:37 AM

போடி : போடி அருகே மீனாட்சியம்மன் கண்மாய் நீர் நிரம்பிய நிலையில் தடுப்புச்சுவர் இல்லாததால் ரோடு உள்வாங்கி விரிசல் ஏற்பட்டது. 'தினமலர்' செய்தியின் எதிரொலியால் ரோடு சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.
போடி அருகே மீனாட்சிபுரத்திலிருந்து விசுவாசபுரம் செல்லும் ரோட்டில் மீனாட்சியம்மன் கண்மாய் அமைந்துள்ளது. கண்மாயில் தண்ணீர் தேங்குவதன் மூலம் சுற்றியுள்ள கிராமங்களில் கிணறுகளில் தண்ணீர் பெருக்கமும், 450 ஏக்கருக்கு மேல் பாசன வசதி பெறும். இப் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாத நிலை உருவாகும்.
போடியில் இருந்து விசுவாசபுரம், பத்திரகாளிபுரம், டொம்புச்சேரி, காமராஜபுரம், உப்புக்கோட்டை உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லும் வகையில் மீனாட்சிபுரத்தில் இருந்து விசுவாசபுரம் செல்லும் ரோடு அமைந்துள்ளது. மீனாட்சிபுரத்தில் இருந்து விசுவாசபுரம் செல்லும் ரோட்டில் மீனாட்சியம்மன் கண்மாயை ஒட்டி ஓராண்டிற்கு முன்பு நெடுஞ்சாலைத் துறை ரோடு அமைத்து. சமீபத்தில் பெய்த மழையால் மீனாட்சியம்மன் கண்மாயில் நீர் நிரம்பி மறுகால் வெளியேறியது.
இந்நிலையில் கண்மாய் ஒட்டி உள்ள ரோட்டின் ஒரு பகுதி பூமிக்கு அடியில் உள் வாங்கி ரோடு விரிசல் ஏற்பட்டது. கண்மாயில் நீர் நிரம்பி வரும் நிலையில் தொடர்ந்து விரிசல் அதிகரித்து வந்ததால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. இதனால் விவசாயிகள் , வாகன ஓட்டிகளும் அச்சம் அடைந்தனர்.
விவசாயிகள், பொதுமக்கள் பயன் பெறும் வகையில் மீனாட்சியம்மன் கண்மாய் ஒட்டி தடுப்புச் சுவர் அமைக்கவும், ரோடு விரிசல் ஏற்பட்டு சேதம் அடைந்ததை சீரமைக்க வேண்டும் என 'தினமலர்' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.
செய்தியின் எதிரொலியால் நெடுஞ்சாலைத்துறை மூலம் ரோடு சீரமைக்கும் பணி தற்போது நடந்து வருகிறது.