/உள்ளூர் செய்திகள்/சென்னை/ஆவடியில் 'பேனர்' கலாசாரம் மீண்டும் தலைதுாக்கியதால் அதிருப்திஆவடியில் 'பேனர்' கலாசாரம் மீண்டும் தலைதுாக்கியதால் அதிருப்தி
ஆவடியில் 'பேனர்' கலாசாரம் மீண்டும் தலைதுாக்கியதால் அதிருப்தி
ஆவடியில் 'பேனர்' கலாசாரம் மீண்டும் தலைதுாக்கியதால் அதிருப்தி
ஆவடியில் 'பேனர்' கலாசாரம் மீண்டும் தலைதுாக்கியதால் அதிருப்தி
ADDED : ஜன 12, 2024 12:58 AM

ஆவடி, ஆவடி மாநகராட்சியில் அரசியல் கட்சியினர், தனியார் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் தங்கள் ஆடம்பரத்தைக் காட்ட, சாலையின் முக்கிய பகுதிகளில் 'பேனர்'கள் வைத்து வருகின்றனர்.
'விதிகளை மீறி பேனர் வைத்தால், மூன்றாண்டுகள் சிறை மற்றும் 25,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்' என அரசு அறிவித்தும், சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்ளாததால், ஆவடியில் பேனர் கலாசாரம் நாளுக்கு நாள் பெருகி வருகிறது.
'மிக்ஜாம்' புயல் அறிவிப்புக்குப் பின், மாநகராட்சி கமிஷனர் ஷேக் அப்துல் ரஹ்மான் உத்தரவின்படி, பல இடங்களில் இருந்த பேனர்கள் அகற்றப்பட்டன.
புயல் பாதிப்பிற்குப் பின், ஆவடி மாநகராட்சி இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில், சென்னை -- திருப்பதி தேசிய நெடுஞ்சாலை, புதிய ராணுவ சாலை, ஆவடி -- பூந்தமல்லி நெடுஞ்சாலை மற்றும் நகரின் முக்கிய சந்திப்புகளில், மீண்டும் ராட்சத பேனர்கள் பெருகி வருகின்றன.
எனவே, சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள், அத்துமீறி பேனர் வைத்த நிறுவனங்களுக்கு கடுமையான அபராதம் விதித்து, ஆவடி முழுக்க வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
ஆவடியில் பேனர் பிரச்னை குறித்து, நம் நாளிதழ் பலமுறை சுட்டிக்காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.