ADDED : ஜன 11, 2024 11:37 PM
கோலார்: சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்ய முயற்சித்தவரை, கோலார் சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
கோலார் டமக்கா தொழிற் பேட்டை பகுதியில், கஞ்சா விற்பனை செய்வதாகசைபர் கிரைம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. டமக்கா தொழிற்பேட்டை பகுதியில், கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த ஆந்திர மாநிலம், சாந்திபுரம் கிராமத்தை சேர்ந்த சீனிவாசலு என்பவரை கைது செய்தனர்.
அவரிடம் இருந்த 1 கிலோ 660 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 1 லட்சம் ரூபாய். கஞ்சா போதைப் பொருளை தொழிற் பேட்டையின் தொழிலாளர்களுக்கும் புறநகர் பகுதியை சேர்ந்தவர்களுக்கும் விற்பனை செய்ய கொண்டு வந்ததாக சீனிவாசலு தெரிவித்தார்.