/உள்ளூர் செய்திகள்/கடலூர்/பொங்கல் பரிசு தொகுப்பு கூடுதல் பதிவாளர் ஆய்வுபொங்கல் பரிசு தொகுப்பு கூடுதல் பதிவாளர் ஆய்வு
பொங்கல் பரிசு தொகுப்பு கூடுதல் பதிவாளர் ஆய்வு
பொங்கல் பரிசு தொகுப்பு கூடுதல் பதிவாளர் ஆய்வு
பொங்கல் பரிசு தொகுப்பு கூடுதல் பதிவாளர் ஆய்வு
ADDED : ஜன 12, 2024 04:10 AM

கடலுார்: கடலுார் மாவட்டத்தில் அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணியை கூடுதல் பதிவாளர் ஆய்வு செய்தார்.
கடலுார் மாவட்டத்தில் வடபுரம் கீழ்பாதி, சிங்கிரிகுடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் கட்டுப்பாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரசின் பொங்கல் பரிசு தொகுப்பை தமிழ்நாடு மாநில நகர வங்கிகளின் கூடுதல் பதிவாளர் சிவமலர் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, சரவணபவ கூட்டுறவு பண்டக சாலை, கடலுார் கூட்டுறவு விற்பனை சங்கம், திருவந்திபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கட்டுப்பாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொங்கல் பரிசு தொகுப்பையும் ஆய்வு செய்தார்.
மேலும், சிதம்பரம் மற்றும் விருத்தாசலம் கூட்டுறவு நகர வங்கிகளின் கடன் வழங்குதல், வசூல் பணிகள் மற்றும் வங்கிகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.
ஆய்வின் போது, மண்டல இணைப் பதிவாளர் திலீப்குமார், துணைப் பதிவாளர்கள் அன்பரசு, இம்தியாஸ், இணைப் பதிவாளர் அலுவலக கண்காணிப்பாளர்கள் ராஜன், புருஷோத்தமன், கூட்டுறவு சார் பதிவாளர்கள் ரவிசங்கர், சரண்யா, வேலாயுதம், மாவட்ட மத்திய கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குனர் தேவி, சிதம்பரம் கூட்டுறவு நகர வங்கி செயலாட்சியர் சங்கீதா, விருத்தாசலம் கூட்டுறவு நகர வங்கி பொது மேலாளர் யாரப்ஜான், மத்திய கூட்டுறவு வங்கி பொது மேலாளர் இளங்கோ உடனிருந்தனர்.