பள்ளி மாணவி கடத்தல் வாலிபருக்கு வலை
பள்ளி மாணவி கடத்தல் வாலிபருக்கு வலை
பள்ளி மாணவி கடத்தல் வாலிபருக்கு வலை
ADDED : ஜூலை 13, 2011 01:39 AM
கடலூர் : பள்ளி மாணவியை கடத்திச் சென்ற டிராவல்ஸ் ஊழியரை போலீசார்
தேடிவருகின்றனர்.
கடலூர் பாதிரிக்குப்பத்தைச் சேர்ந்தவர் ராமஜெயம் மகள்
ஜெயலட்சுமி,16. கடலூரில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து
வருகிறார். நேற்று முன்தினம் காலை பள்ளிக்கு சென்ற ஜெயலட்சுமி மாலை வீடு
திரும்பாததால் சந்தேகமடைந்த அவரது பெற்றோர், உறவினர் மற்றும் நண்பர்கள்
வீடுகளில் தேடினர். ஜெயலட்சுமியை, கடலூரில் உள்ள தனியார் டிராவல்சில் வேலை
பார்க்கும் மேல்பட்டாம்பாக்கம், லட்சுமிபுரம் மாரியம்மன் கோவில் தெருவைச்
சேர்ந்த கண்ணன் மகன் ராஜேஷ் கடத்தி சென்றது தெரிய வந்தது. இது குறித்த
புகாரின் பேரில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து ராஜேஷை
தேடிவருகின்றனர்.