/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழாஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா
ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா
ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா
ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா

சூலூர்
சூலூர் அடுத்த கரவளி மாதப்பூர் ஸ்ரீ ராம பக்த ஆஞ்சநேயர் கோவிலில், நேற்று ஹனுமன் ஜெயந்தி விழா மற்றும் ஏழாம் ஆண்டு விழா நடந்தது.
துடியலுார்
துடியலூரில் உள்ள குபேர ஆஞ்சநேயர் கோவிலில் அதிகாலை அபிஷேக ஆராதனைகள், அன்னதானம், பஜனை, பக்தி சொற்பொழிவு, வள்ளி கும்மி ஆட்டம் நிகழ்ச்சிகள் நடந்தன. பெரியநாயக்கன்பாளையம் பாலகிருஷ்ணா கல்யாண மண்டபம் ரோடு, ஆதிநாராயண பெருமாள் திருக்கோவிலில் அனுமன் ஜெயந்தியையொட்டி ராம பக்த ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம் மற்றும் அலங்கார பூஜை நடந்தது. பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ஆஞ்சநேயர் வெண்ணை காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
அன்னுார்
அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில், ஆஞ்சநேயர் சன்னதியில், நேற்று முன்தினம் மாலை விஸ்வரூப தரிசனம் நடந்தது. இதையடுத்து அபிஷேகம் செய்யப்பட்டு, சகஸ்ர நாம அர்ச்சனை நடைபெற்றது. ஆஞ்சநேயருக்கு 1008 வடைகள் உடன் மாலை அணிவிக்கப்பட்டது.