ADDED : ஜன 12, 2024 12:27 AM
திருப்பூர்;பல்லடத்தில் பல்வேறு குற்ற வழக்கில் தொடர்புடைய வாலிபரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
பல்லடம், என்.ஜி.ஆர்., ரோட்டில் உள்ள மொபைல் போன் கடை ஒன்றில், உசிலம்பட்டியை சேர்ந்த திருமுருகன், 27 என்பவர் உள்ளே நுழைந்து கடந்த நவ., 18ம் தேதி கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தார்.
அவரை பல்லடம் போலீசார் கைது செய்தனர். இவர் மீது, திருப்பூர் உட்பட பல மாவட்டங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது.
தொடர்ந்து, இவர் பொதுமக்களுக்கும், பொது அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொள்வதால், குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய திருப்பூர் எஸ்.பி., சாமிநாதன் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.
அதனை ஏற்றுக் கொண்ட, கலெக்டர் உத்தரவின் பேரில், திருமுருகன் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.