Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/சுகாதாரக்கேட்டில் தத்தளிக்கும் சாணார்பட்டி ஊராட்சி

சுகாதாரக்கேட்டில் தத்தளிக்கும் சாணார்பட்டி ஊராட்சி

சுகாதாரக்கேட்டில் தத்தளிக்கும் சாணார்பட்டி ஊராட்சி

சுகாதாரக்கேட்டில் தத்தளிக்கும் சாணார்பட்டி ஊராட்சி

ADDED : ஜன 12, 2024 06:33 AM


Google News
Latest Tamil News
சாணார்பட்டி : -சாணார்பட்டி ஊராட்சி நிர்வாகத்தின் அலட்சியத்தால் குடியிருப்பு பகுதிகளில் ஆங்காங்கே கொட்டப்படும் குப்பை குவியல்களால் சுகாதார பிரச்னை ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளதால் பொதுமக்கள் பாதிக்கின்றனர்.

சாணார்பட்டி ஊராட்சியில் துாய்மை பணியாளர்களைக் கொண்டு முறையாக பணிளை மேற்கொள்ளாததாலும், குப்பையை குடியிருப்பு பகுதிகளில் கொட்ட அனுமதிப்பதாலும் சுகாதாரப் பிரச்னை ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் உள்ளது.

இந்த ஊராட்சியில் போலீஸ் ஸ்டேஷன்,அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன், சார் பதிவாளர் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம்,கால்நடை மருந்தகம், அரசு வங்கி, அரசு உயர்நிலைப் பள்ளிகள் என ஒருங்கிணைந்து உள்ளதால் தினமும் ஏராளமான பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் வந்து செல்கின்றனர்.

சாணார்பட்டியிலிருந்து வீரசின்னம்பட்டி செல்லும் ரோட்டில் குடியிருப்பு பகுதியில் குப்பை கொட்டப்பட்டு சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.

சாணார்பட்டி கோணப்பட்டி செல்லும் ரோட்டிலும் குப்பை கொட்டப்பட்டுள்ளது. ராகலாபுரம் செல்லும் ரோடு, நத்தம் நெடுஞ்சாலை உள்ளிட்ட பகுதி குப்பை , கோழி கழிவுகள் என அனைத்தும் இங்கு கொட்டப்படுகிறது.

ஊராட்சி நிர்வாகத்தினர் துாய்மை பணியாளர்களை கொண்டு முறையாக குப்பையை சேகரிக்காததால் குப்பை குவியலாக காணப்படுகிறது.

கொசு தொல்லையும் அதிகரித்து மக்கள் பாதிப்பை சந்திக்கின்றனர். அரசு ஒப்பந்த பணிகளை ஊராட்சி செயலர் தனிப்பட்ட முறையில் எடுத்து செய்கிறார் என மக்கள் குற்றம் சாட்டினர்.

சுகாதாரக்கேடாக உள்ளது


இரா.பிரபாகரன்,கிழக்கு மாவட்ட செயலாளர்,நாம் தமிழர் கட்சி,வீரசின்னம்பட்டி: வீரசின்னம்பட்டி செல்லும் ரோட்டில் குப்பை ,கோழி கழிவுகள் அதிகளவு கொட்டப்பட்டு குப்பை மேடு போல் காட்சியளிக்கிறது. ஊராட்சிகளில் குப்பைகளை சேகரிக்கவும், மக்கும்,மக்காத குப்பை பிரித்து குப்பை மேலாண்மை செய்யவும் பணியாளர்கள் உள்ளனர்.

இருந்தும் பணியாளர்களை முறையாக பயன்படுத்தாததால் எங்கும் குப்பை கொட்டலாம் என்ற மனநிலைக்கு மக்களும் வந்த விட்டனர்.

நடவடிக்கை எடுங்க


என்.தனபால்,பா.ஜ., பிரமுகர், வீரசின்னம்பட்டி: அனைத்து இடங்களிலும் குப்பை கொட்டப்பட்டு கடுமையான சுகாதார பிரச்னை ஏற்படுகிறது. குடியிருப்பு பகுதிகளில் கொட்டப்படும் குப்பை என அனைத்தையும் ஊராட்சி துப்புரவு பணியாளர்கள் தீட்டு கொளுத்துகின்றனர். இதன் நச்சு புகையால் யெதாற்று நோய் அபாயம் உள்ளது. அரசு பணியில் உள்ளவர்கள் அவர்களுக்கு கொடுத்த பணிகளை செய்வதை விட்டு , அரசு கான்ட்ராக்ட் வேலைகளை செய்கின்னர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கொசு உற்பத்தியாகிறது


ராஜா,டிரைவர்,சாணார்பட்டி: ஊராட்சியில் எங்கு பார்த்தாலும் குப்பை என சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. துாய்மைபணிகளை செய்யும் ஊராட்சி அலுவலகத்தின் எதிரிலே தண்ணீர் தேங்கி கொசு உற்பத்தியாகும் அளவிற்கு மோசமானநிலை உள்ளது. சுகாதாரப் பணிகளுக்கு அரசு நிதி ஒதுக்கியும், துாய்மை பணிகளை மேற்கொள்ள பணியாளர்களிலிருந்தும் ஊராட்சி நிர்வாக அதிகாரிகள் அதனைப் பயன்படுத்தாமல் இருப்பதால் ஊராட்சி குப்பை மேடாக உள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us