Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/போதைக்கு எதிரான குறும்படம்; பிப்.10க்குள் வழங்க வலியுறுத்தல் 

போதைக்கு எதிரான குறும்படம்; பிப்.10க்குள் வழங்க வலியுறுத்தல் 

போதைக்கு எதிரான குறும்படம்; பிப்.10க்குள் வழங்க வலியுறுத்தல் 

போதைக்கு எதிரான குறும்படம்; பிப்.10க்குள் வழங்க வலியுறுத்தல் 

ADDED : ஜன 12, 2024 12:23 AM


Google News
சிவகங்கை : போதை பொருட்களால் ஏற்படும் தீமை குறித்து சிறந்த குறும்படம் தயாரித்து பிப்., 10 க்குள் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் அனைத்து கல்லுாரி மாணவ, மாணவிகள் மற்றும் பொது மக்களிடையே மது அருந்துதலுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரம் மற்றும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதற்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரத்துடன் போதை பொருட்களை தவறான பயன்பாட்டிற்கு பயன்படுத்துவதற்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்துவதன் ஒரு பகுதியாக மாவட்ட அளவில் கல்லுாரி மாணவர்களிடையே போதை பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமை குறித்து குறும்படம் எடுக்க செய்து பொது மக்கள் கூடும் இடங்களில் வெளியிட உள்ளனர்.

இது போன்ற குறும்படங்கள் 3 முதல் 4 நிமிடங்களில் முடியும் வகையில் தமிழில் இருத்தல் வேண்டும்.

போதை விழிப்புணர்வு எனும் கருத்தில் இருப்பது அவசியம். குறும்பட தயாரிப்பு முழுவதும் மாணவ, மாணவிகளின் கலைத்திறன், படைப்பாற்றலை வெளிப்படுத்தும் விதமான கதை, இயக்கம், இசை, படப்பிடிப்பு, நடிப்பு, தொகுப்பாக்கம் இருத்தல் வேண்டும்.

கல்லுாரியில் படிக்கும் மாணவர்கள் மட்டுமே குறும்படம் தயாரிக்க வேண்டும். முதல் 3 இடங்களை பிடிக்கும் குறும்படங்களுக்கு பரிசு வழங்கப்படும். தயாரிக்கப்பட்ட குறும்படத்தை பிப்.10ம் தேதிக்குள் சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள உதவி கமிஷனர் (மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வு துறை) அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us