Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/கண்டதற்கு எல்லாம் பொங்கும் போராளி நடிகர்கள் கள்ளச்சாராய சாவில் ‛கள்ள மவுனம்' ஏன்?

கண்டதற்கு எல்லாம் பொங்கும் போராளி நடிகர்கள் கள்ளச்சாராய சாவில் ‛கள்ள மவுனம்' ஏன்?

கண்டதற்கு எல்லாம் பொங்கும் போராளி நடிகர்கள் கள்ளச்சாராய சாவில் ‛கள்ள மவுனம்' ஏன்?

கண்டதற்கு எல்லாம் பொங்கும் போராளி நடிகர்கள் கள்ளச்சாராய சாவில் ‛கள்ள மவுனம்' ஏன்?

UPDATED : ஜூன் 21, 2024 04:02 PMADDED : ஜூன் 20, 2024 03:05 PM


Google News
Latest Tamil News
சென்னை : ஜாதி, மொழி, இனவாதம் பேசி அதிக அறிவாளிகள் போல பொங்கி எழுந்து, கருத்துகளை கக்கியும், பாஜ, அதிமுக கட்சிகளுக்கு எதிராக வேண்டுமென்றே விமர்சனங்களை செய்தும், ஹிந்து மதத்திற்கு எதிரான கருத்துகளை கூறியும் சமூக வலைதளங்களை சூடுபிடிக்க வைத்த சினிமா நடிகர்கள், கள்ளக்குறிச்சியில் நடந்த கள்ளச்சாராய சாவுகளுக்கு கண்டனம் தெரிவிக்காமல் கள்ள மவுனம் காப்பது ஏன் என்று பொது மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

தமிழக நடிகர் சூர்யா, அவரது மனைவி நடிகை ஜோதிகா, பிரகாஷ்ராஜ், சத்யராஜ், சித்தார்த், விஜய் சேதுபதி, நடிகை ஐஸ்வர்யா ராஜேஸ், விஷால், கமல் ஆகியோர் கடந்த காலங்களில் ஜாதி பிரச்னை, மொழி பிரச்னை, இனவாதம், இயற்கை பேரிடர் காலங்களில் அரசின் நடவடிக்கைகளை விமர்சித்து அறிக்கை வெளியிட்டார்கள். சபரிமலை பிரச்னை போன்ற நேரங்களில் ஹிந்து மத நம்பிக்கைகளுக்கு எதிராக பேசினார்கள். அப்பட்டமாக திமுகவுக்கு ஆதரவாக நடந்துகொண்டார்கள்.

அப்போது அவர்கள் உதிர்த்த கருத்து முத்துகள் இவை:

சூர்யா


Image 1283583

நீட் தேர்வுக்கு எதிராக பிரச்னை எழுந்த போது, நடிகர் சூர்யா வெளியிட்ட அறிக்கையில், அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டிய அரசு, ஏறறத்தாழ்வை உருவாக்குகிற கல்வி முறையைச் சட்டமாக கொண்டு வருகிறது என பொங்கினார்.

அவரது அறிக்கையில், மத்தியில் ஆளுங்கட்சியாக இருந்த பாஜ அரசுக்கு எதிராக கருத்து சொல்ல வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே இருந்ததே தவிர, உண்மையில் மாணவர்களின் நலனில் அக்கறையை காட்டவில்லை.

மத்திய அரசு கொண்டு வந்த புதிய கல்விக் கொள்கை தொடர்பாகவும் அவர் பேசும் போது, 3 வயதிலேயே 3 மொழிகள் திணிக்கப்படுகிறது. முதல் தலைமுறை மாணவர்கள் எப்படி இதனை சமாளிப்பார்கள். இதற்கு அமைதியாக இருந்தால், இந்த கல்விக் கொள்கை நிச்சயம் திணிக்கப்படும் என்றார்.

ஓரிரு மொழிகளை கூடுதலாக தெரிந்துகொள்வது ஒருவரின் எதிர்காலத்திற்கு நல்லது என்ற எண்ணமே இல்லாமல் சூர்யா இப்படி ஒரு கருத்தை கூறி இருந்தார். அதுமட்டுமா, இப்போது அவர் மும்பைக்கே குடிபெயர்ந்து விட்டார். விரைவில் ஹிந்தி படங்களிலும் நடிக்க உள்ளார். மனைவி ஜோதிகா ஹிந்தியில் நடித்து வருகிறார். இவர் மட்டும் ஹிந்தி கற்கலாம், ஹிந்தியில் நடிக்கலாம், மற்றவர்கள் ஹிந்தி கற்க கூடாதா... என்ன ஒரு சுயநலம்.

ஜோதிகா


ஒரு விருது வழங்கும் விழாவில் ஜோதிகா பேசும் போது, கோவிலுக்காக அதிகம் காசு கொடுக்கிறீர்கள். வண்ணம் அடித்து பராமரிக்கிறீர்கள். கோவில் உண்டியலில் அவ்வளவு பணம் போடுகிறீர்கள். அதே பணத்தை தயவு செய்து பள்ளிகளுக்குக் கொடுங்கள். மருத்துவமனைகளுக்குக் கொடுங்கள் எனக்கூறி சர்ச்சையை உண்டாக்கினார்.Image 1283584

பிரகாஷ்ராஜ்


இவர் எப்போதுமே பொதுவாக கருத்துக்களை கூறுவது போல் ‛‛பம்மாத்து‛' செய்துகொண்டு, பாஜ கட்சிக்கு எதிராகவும் ஹிந்து மதத்திற்கு எதிராகவும் கருத்துகளை கூறுவது வழக்கம்.

வேளாண் சட்டம் வாபஸ் பெறப்பட்ட போது, நடிகர் பிரகாஷ் ராஜ், எனது தேசத்தைச் சேர்ந்த அயராது போராடும் விவசாயிகள் மன்னரை மண்டியிட வைத்துள்ளனர் எனக்கூறியிருந்தார்.Image 1283586

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விழா ஒன்றில் பேசும் போது, ஹிந்தி மொழி இந்தியாவின் பன்முகத் தன்மையின் வெளிப்பாடு என்று பேசினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பிரகாஷ்ராஜ், உங்களுக்கு ஹிந்தி மட்டுமே தெரியும் என்பதால், எங்களை ஹிந்தி பேசச் சொல்கிறீர்களா. முதலில் ஹிந்தி திணிப்பை நிறுத்துங்கள் என பதிவிட்டு இருந்தார்.

அதேபோல், மத்திய அரசின் திட்டங்களையும், கொள்கையையும் விமர்சிப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தார்.

சத்தியராஜ்


Image 1283585தன்னை ஒரு பகுத்தறிவு பகலவன் என்று பெருமை பேசி, மார் தட்டிக்கொள்ளும் நடிகர் சத்தியராஜ், பலமுறை பாஜவுக்கும் அதிமுகவுக்கும் எதிராக பேசி, தன்னை திமுகவின் விசுவாகியாக காட்டிக்கொண்டவர்.

அதுமட்டுமா பெரும்பான்மை மக்கள் பின்பற்றும் ஹிந்து மதத்திற்கு எதிராக பேசுவதும் இவரது வழக்கம். ஹிந்துகள் யாரும் நம்மை ஒன்றும் செய்ய மாட்டார்கள் என்ற நம்பிக்கை தான் இதற்கு காரணம்.

சில ஆண்டுகளுக்கு முன்பு வழக்கம் போல தமிழகத்திற்கு கர்நாடக காவிரி தண்ணீரை திறக்கவில்லை. இந்த பிரச்னை அப்போது தமிழகத்தில் பற்றி எரிந்து கொண்டிருந்தது. அந்த நேரத்தில் சென்னை அணிக்கும் பெங்களூரு அணிக்கும் பிரிமீயம் லீக் கிரிகெட் போட்டி சென்னையில் நடந்தது. தண்ணீர் தராத கர்நாடாகவை சேர்ந்த பெங்களூரு அணி சென்னைக்கு வந்து கிரிக்கெட் விளையாடுவதை கண்டித்து நிறைய அமைப்புக்கள் கிரிக்கெட் ஸ்டேடியத்திற்கு ஊர்வலம் சென்றன.

எதற்கெடுத்தாலும் நாடு மக்கள் என்று வாய்க்கு வந்ததை உளறும் பிரகாஷ்ராஜ், சத்யராஜ் ஆகியோர் வாயே திறக்கவில்லை. கர்நாடகாவைச்சேர்ந்த பிரகாஷ்ராஜ்க்கு அப்போதுமட்டும் கர்நாடாகா பாசம் ஒட்டிக்கொண்டது. தமிழ்பாசம் தலைமறைவானது. பணம் மட்டுமே அவர்களுக்கு பிரதானமானது. தமிழ் படங்களில் நடிப்பார் கோடிக்கணக்கில் சம்பாதிப்பார். கர்நாடகாவா, தமிழ்நாடா என்று வரும்போது வாய் ஒட்டிக்கொள்ளும் திறக்காது.

சத்தியராஜ் அதற்குமேல் புரட்சித் தமிழன் என்று தனக்குத்தானே பட்டம் சூட்டிக்கொண்ட இவர் புரட்டு தமிழராக மாறி தமிழ்நாட்டை மறந்துவிட்டு புரண்டு படுத்து துாங்கிவிடுவார்.

சித்தார்த்


செனட்ரல் விஸ்டா திட்டத்தை விமர்சித்த நடிகர் சித்தார்த், தேவையில்லாத திட்டத்திற்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்யப்படுகிறது. தடுப்பூசி போடுவதற்கும், பொது சுகாதாரத்திற்கும் இந்த நிதியை பயன்படுத்தி இருக்கலாம் எனக்கூறியிருந்தார்.Image 1283588

ஒரு நாட்டுக்கு வளர்ச்சி திட்டங்கள் எவ்வளவு முக்கியம், காலத்திற்கு ஏற்ற மாற்றம் தேவை என்பதைக் கூட அறியாமல் இவர் இப்படி பேசுகிறாரே என்று அப்போது கண்டனங்கள் எழுந்தன.

அதேபோல், ஹிந்தி மொழி திணிக்கப்படுவதாக கூறி, சித்தார்த் கருத்து தெரிவித்தார்.

சென்னையில் வெள்ளம் ஏற்பட்ட போது, அப்போதைய அதிமுக ஆட்சியை விமர்சித்து பல கருத்துகளை பதிவிட்டு இருந்தார். கோவிட் காலத்தில் மத்திய அரசை தொடர்ந்து விமர்சித்து வந்தார்.

விஜய் சேதுபதி


ஹிந்தி எதிர்ப்பு, விவசாயிகள் பிரச்னை உள்ளிட்ட பல விஷயங்களில் கருத்து தெரிவித்தவர் நடிகர் விஜய சேதுபதி. விழா ஒன்றில் பேசும் போது, காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசை விமர்சித்தவர், காஷ்மீர் விவகாரம் ஜனநாயகத்திற்கு எதிரானது எனக்கூறியிருந்தார்.Image 1283587

அதாவது, காஷ்மீர் நமது நாட்டின் ஒரு அங்கம் என்பதைக் கூட மறந்துவிட்டு, நாட்டுக்கு எதிராக கருத்து தெரிவித்தார். உண்மையில் நாட்டுக்கு எதிராக கருத்து தெரிவித்த காரணத்தால் இவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கையே எடுத்திருக்கலாம்.

ஐஸ்வர்யா ராஜேஷ்


நடிகை ஐஸ்வர்யா ராஜேஷூம், ஹிந்தி மொழிக்கு எதிராக கருத்து தெரிவித்தார். ‛ ஹிந்தி தெரியாது போடா' எனற வாசகத்துடன் போட்டோ எடுத்து சமூக வலைதளத்தில் போட்டோ வெளியிட்டார்.

பிறகு அவரே ஹிந்தி படத்தில் நடித்தார். பணம் கிடைக்கிறது என்றதும் இவருக்கு கொள்கை காணாமல் போனது.Image 1283589

சபரிமலைக்கு பெண்கள் செல்வது தொடர்பாக பிரச்னை எழுந்தபோது, கடவுள் அனைவருக்கும் பொதுவானவர். பெண்களை வரக்கூடாது என கடவுள் கூறவில்லை. இதுபோன்ற விஷயங்களை நம்புவது கிடையாது எனக் கூறி, ஹிந்து மத நடைமுறைக்கு எதிராக கருத்து தெரிவித்தார்.

பாஜவுக்கு எதிராகவும் அதிமுகவுக்கு எதிராகவும் பேசிக்கொண்டு இருந்த இந்த நடிகர்களின் வாய் திமுக ஆட்சிக்கு வந்ததும் தானாகவே மூடிக்கொண்டது. இப்போது நடக்கும் எந்த பிரச்னையும் இவர்களை பாதிக்கவில்லை போலும்.

தற்போது கள்ளக்குறிச்சியில் 42 பேர் கள்ளச்சாராயம் குடித்து அநியாயமாக இறந்துள்ளனர். 83க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் கவலைக்கிடமாக சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால், இது பற்றி இந்த நடிகர்கள் வாய் திறக்காமல் ‛கள்ள மவுனம் ' காப்பது ஏன் என பலர் கேள்வி எழுப்புகின்றனர் அரசின் அதிருப்திக்கு ஆளாக நேரிடுமோ என்ற பயம் காரணமா என்றும் கேட்கின்றனர்.

அப்படி என்றால் இவர்கள் உண்மையான போராளிகள் இல்லை. சுயநலவாதிகள். சொந்த விருப்பு வெறுப்புக்கு ஏற்ப கருத்து சொல்கிறார்கள் என்றும் கண்டனம் எழுந்துள்ளது.

அதே போல புரட்சி போராளிகள் என்று வெளியே நடித்துக்கொண்டு இருந்த ‛‛கப்சா காம்ரேட்''டுகளான கோவன், நந்தினி போன்றவர்கள், திமுக ஆட்சிக்கு வந்ததும் வாயே திறப்பதில்லை. இப்போது அவர்களது புரட்சி கருத்துகள் எங்கே போய் புதைந்துகொண்டது என தெரியவில்லை.

நடிகர்கள் யாரைக்கண்டு அஞ்சுகின்றனர்?

இது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கள்ளச்சாராய மரணம் தொடர்பாக திரையுலகில் இருந்து ஒரு குரலும் வரவில்லை; விஜய் மட்டும் தமிழர்களுக்கு குரல் கொடுத்துள்ளார். மீதமுள்ள நடிகர்கள் யாரைக்கண்டு அஞ்சுகின்றனர்? எனக் கேட்டுள்ளார்.



மக்கள் புறக்கணிக்க வேண்டும்


சந்தர்ப்பவாதிகளாகவும், ஒரு கட்சிக்கு ஆதராகவும், ஹிந்து மத்திற்கு எதிராகவும் பேசும் நடிகர், நடிகைகள் நடிக்கும் படங்களை பொதுமக்கள் புறக்கணிக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us