கள்ளச்சாராயம் அருந்தி பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம்: அண்ணாமலை அறிவிப்பு
கள்ளச்சாராயம் அருந்தி பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம்: அண்ணாமலை அறிவிப்பு
கள்ளச்சாராயம் அருந்தி பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம்: அண்ணாமலை அறிவிப்பு
UPDATED : ஜூன் 20, 2024 07:01 PM
ADDED : ஜூன் 20, 2024 02:34 PM

கள்ளக்குறிச்சி: கள்ளச்சாராயம் குடித்து பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை ஆறுதல் தெரிவித்தார். பின்னர் அண்ணாமலை கூறியதாவது:
கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, மத்திய அரசின் திட்டங்கள் மூலம் உதவிகள் வழங்கப்படும். பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். கள்ளச்சாராயம் சம்பவம் பற்றி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா என்னிடம் தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார்.
நாகரிகமான சமுதாயத்தில் எதும் நடக்க கூடாது என நினைக்கிறோம். கள்ளச்சாராயம் விற்பனை கிராமங்களில் நடைபெறவில்லை. மாவட்ட தலைநகரின் மையப்பகுதியில் நடந்துள்ளது. பாக்கெட் சாராயம் விற்பனை நடைபெற்றதை அரசு வேடிக்கை பார்த்து கொண்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.