ADDED : ஜன 12, 2024 12:36 AM
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை தேவாங்கர் கலை கல்லூரியில் நூலகத் துறை சார்பாக, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புத்தகம் மாற்றும் திருவிழா நடந்தது. முதல்வர் உமாராணி முதல் புத்தகத்தினை வழங்கி விற்பனையை துவக்கி வைத்தார். துணை முதல்வர் நாகராஜன் முன்னிலை வகித்தார்.
மாணவர்கள் தங்களிடமிருந்த படித்த புத்தகத்தை கொடுத்து விட்டு அதற்கு பதிலாக தங்களுக்கு தேவையான புத்தகங்களை எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து 5 ஆண்டுகளாக இந்த நிகழ்ச்சி நடந்து வருகிறது.
ஏற்பாடுகளை கல்லூரி நூலகர் ராஜவேல், அலுவலர்கள் ஜெய குரு நாராயணன், மகாதேவி செய்தனர்.