ADDED : ஜன 12, 2024 12:14 AM

ரெகுநாதபுரம் : ரெகுநாதபுரம் ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடப்பு ஆண்டிற்கான கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் குறித்து வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போட்டிகள் நடந்தது.
நேற்று முன்தினம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கில் ஓவியப்போட்டி, கட்டுரைப் போட்டி மற்றும் பேச்சுப் போட்டிகள் நடந்தது.
ரெகுநாதபுரம் ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 9ம் வகுப்பு மாணவி அனுதர்ஷினி ஓவிய போட்டியில் முதலிடம், 8ம் வகுப்பு மாணவர் பிரதிவி சரண் பேச்சு போட்டியில் மூன்றாமிடம் பெற்று கலெக்டர் விஷ்ணு சந்திரனிடம் பரிசு சான்றிதழ் பெற்றனர்.
பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவர்களை பள்ளி தாளாளர் கோகிலா, நிர்வாக ஆலோசகர் ஜேக்கப், முதல்வர் பிரீத்தா மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.