/உள்ளூர் செய்திகள்/கடலூர்/கீழச்சாவடியில் பொங்கல் தொகுப்பு வழங்கல்கீழச்சாவடியில் பொங்கல் தொகுப்பு வழங்கல்
கீழச்சாவடியில் பொங்கல் தொகுப்பு வழங்கல்
கீழச்சாவடியில் பொங்கல் தொகுப்பு வழங்கல்
கீழச்சாவடியில் பொங்கல் தொகுப்பு வழங்கல்
ADDED : ஜன 12, 2024 04:05 AM

கிள்ளை: கிள்ளை அடுத்த கீழச்சாவடி ரேஷன் கடையில் நேற்று பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
பரங்கிப்பேட்டை தெற்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் கலையரசன் தலைமை தாங்கி, 289 பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கினார். நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் மோகன்தாஸ், தில்லைவிடங்கன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் ஜெயா, முன்னாள் கதர் வாரிய உறுப்பினர் தன ஜெயராமன் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.
விற்பனையாளர் கலியபெருமாள், நன்றி கூறினார்.